தொலைக்காட்சி கண்டுபிடித்தவர் யார்? | Tholaikatchi Kandupidithavar in Tamil

Advertisement

தொலைக்காட்சி கண்டுபிடித்தவர் பெயர் | TV Kandu Pidichathu Yaru Tamil

அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் எந்த ஒரு பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாமல் வாழ்க்கையை மேற்கொண்டார்கள். இன்றைய காலத்தில் அவையெல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. வீட்டில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கான சாதனத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது தொலைக்காட்சி. எவ்வளவு மணி நேரம் மொபைல் போன் பார்த்தாலும் சிறிது நேரம் அந்த தொலைக்காட்சியை பார்க்காமல் யாரும் இருக்கமாட்டோம். அந்த அளவிற்கு எல்லோரிடமும் தொலைக்காட்சியின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சியை பார்க்கிறோமே தவிற தொலைக்காட்சியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? வாங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாம்..

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?

தொலைக்காட்சி கண்டுபிடித்தவர் யார்?

விடை: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு என்பவர் தான் 1926 ஆம் ஆண்டு முதன் முதலில் தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். ஆனால் தொலைக்காட்சி தொழில் நுட்பங்கள் பலரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பலர் கண்டுபிடிப்பு:

  • தொலைக்காட்சியின் டியூபை கண்டுபிடித்தவர் “பில்லோ பான்ஸ்வர்த்” ஆவர்.
  • தொலைக்காட்சியின் கதிர் டியூபை விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
  • இருந்தாலும் தொலைக்காட்சி பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியை அறிமுகம் செய்தவர் ஜோன் லூகி ஃபெர்டு என்றவர் தான் பெருமைக்குரியவராவார்.
பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

டெலிவிஷன் என்ற வார்த்தை அறிமுகம்:

ஜோன் லூகி ஃபெர்டு என்பவர் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். டெலிவிஷன் என்ற வார்த்தையை 1900-ஆம் ஆண்டில் பாரிஸ் மின்சார மாநாட்டில் கான்ஸ்டின்பெர்சிகி என்றவர் ஆற்றிய உரையின் சுருக்கத்திலிருந்து கண்டுபிடித்தார். டெலிவிஷன் என்ற வார்த்தை தூரத்திலிருந்து பார்ப்பது என்று பொருள்படும்.

ஜோனின் முயற்சி:

இதனை தொடர்ந்து ஜோன் ஏன் முழுமையான தொலைக்காட்சியை உருவாக்க முடியாது என்று சிந்தித்தார்.

ஜோனிற்கு, தொழில் சிக்கல், நிதி நெருக்கடி பிரச்சனை போன்றவை ஏற்பட்டாலும் முயற்சியை அவர் கைவிடவில்லை. லண்டனுக்குத் தெற்கே அறுபது மைல் தூரத்தில் ஜோன் ஆய்வகத்தை அமைத்து தொலைக்காட்சி ஆய்வை ஆரம்பித்தார்.

1923- ஆம் ஆண்டு ஜோன் ‘டெலிவிசர்’ என்னும் தொலைக்காட்சிப் பெட்டியை  உருவாக்கினார். 1924 ஆம் ஆண்டு ஜோன் லண்டனுக்கு வந்து வசிக்க தொடங்கினார். அந்த ஆண்டில் ஒரு கடையில் ஜானின் ‘டெலிவிசர்’ பொதுமக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்டது. விளக்கு ஒளியில் பயந்தபடி கேமராவின் முன் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவன் தான் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனிதன் ஜோன் லூகி ஃபெர்டு.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement