TNPSC குரூப்-1 பொது அறிவு வினா விடைகள் | TNPSC Group-1 Gk Question and Answer in tamil

tnpsc group 1 gk questions and answers in tamil

 TNPSC Group-1 Gk Question and Answer in tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் TNPSC குரூப் -1 பொது தேர்வில் தெடர்ந்து கேட்கப்படும் பொது அறிவு வினா விடைகள் சிலவற்றை பார்க்கலாம். நம்மில் பலரும் தமிழ்நாடு அரசின் போட்டி தேர்வுகளான TNPSC குரூப் -1, TNPSC குரூப் -2, TNPSC குரூப் -4 போன்ற பல பொது தேர்வுகளுக்கு நம்மை தயார்படுத்திக் கொண்டிருப்போம். அந்த வகையில் TNPSC குரூப் -1 தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்பவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

TNPSC குரூப் -1 பொது அறிவு வினா விடைகள்:

  1. இந்திய ரிசர்வ் வங்கி அரசுடைமையாக்கப்பட்ட நாள்.?

விடை : ஜனவரி 1, 1949 

2. எத்தனையாவது சட்ட திருத்தத்தின்மூலம் ‘சமயசார்பற்ற'(Secular) என்ற வார்த்தை அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சேர்க்கப்பட்டது.?

விடை : 42 வது சட்ட திருத்தத்தின் போது

3. 2022 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்.?

விடை : ஆனி எர்னாக்ஸ்(Annie Ernaux), பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.

4. கி.பி. முதலாம் நூற்றாண்டில் யாரால் கிறிஸ்தவ மதம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது.?

விடை : புனித தாமஸ் 

5. முதல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு.?

விடை : 1968

6. 2022-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்.? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்.?

விடை : ஸ்வான்டே பாபோ (Svante Paabo), சுவீடன் நாட்டை சேர்ந்தவர் 

7. சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தவர்கள் யார்.?

விடை : சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு

8. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி எது.?

விடை : சில்கா ஏரி 

9. இந்திய நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன.?

விடை : ஐ.என்.எஸ் விக்ராந்த் 

10. இந்திய நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் எது.?

விடை : செப்டம்பர் 2, 2022

11. உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்திற்கு புறம்பான, தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியவர் யார்.?

விடை : வில்லியம் பெண்டிக் பிரபு 

12. யுனெஸ்கோ அமைப்பின் 2022- ஆம் ஆண்டின் அமைதிக்கான பரிசு பெற்றவர் யார்.?

விடை : ஏஞ்சலா மெர்க்கல்  

13. ஹூணர்கள் யார் ஆட்சியின் போது இந்தியா மீது படையெடுத்தார்கள்.?

விடை : ஸ்கந்த குப்தர்

14. தமிழக அரசர்களின் கூட்டணி பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது.?

விடை : ஹதிகும்பா கல்வெட்டு 

15. உலகில் அதிக மழை பெரும் இடமான ‘மெளசின்ரம்’ அமைந்துள்ள இந்திய மாநிலம் எது.?

விடை : மேகாலயா 

16. ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது.?

விடை : சென்னை

17. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்(SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு.?

விடை : 1971

18. கல்கத்தாவில் உள்ள இந்துக் கல்லூரியை நிறுவியவர் யார்.?

விடை : டேவிட் ஹேர் 

19. இந்தியாவின் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டுள்ள மாநிலம் எது.?

விடை : கேரளா 

20. சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட ‘லால் கிலா’ எனப்படும் செங்கோட்டையை கட்டியவர் யார்.?

விடை : ஷாஜஹான் 

21. தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது.?

விடை : விதி 17

22. காமராஜர் தமிழக முதலமைச்சராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்.?

விடை : 9 ஆண்டுகள் 

23. 2020 -ஆம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை யார்.?

விடை : ஆஷா பரேக் 

24. கார்பன் மின்னிழையை கண்டுபிடித்தவர் யார்.?

விடை : எடிசன் 

25. NITI ஆயோக் அமைக்கப்பட்ட ஆண்டு.?

விடை : ஜனவரி 1,2015

இதையும் படியுங்கள் => நெடுநல்வாடை TNPSC குறிப்புகள்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil