பொது அறிவு நடப்பு நிகழ்வுகள்

TNPSC Tamil Notes 

நடப்பு நிகழ்வுகள் 2023 வினா விடை

TNPSC Tamil Notes – நண்பர்களுக்கு வணக்கம்.. பொது தேர்வுகளில் பொது அறிவு சார்ந்த நடப்பு நிகழ்வுகள் வினா விதைகளாக அதிகளவு கேட்கப்படுகிறது. ஆகவே நாம் தின்தோறும் பொது அறிவு நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு பயன்படும் வகையில் இந்த பதிவில் பொது அறிவு நடப்பு நிகழ்வுகள் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பொது அறிவு நடப்பு நிகழ்வுகள் – TNPSC Tamil Notes 

1 ஐக்கிய நாடுகளவை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை: அக்டோபர் 24

2 “சுரக்ஷா ரோந்து கப்பலை” (INCG வருணா) இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெற்ற நாடு எது?

விடை: இலங்கை.

3 சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் புதிய பெயர் என்ன?

விடை: தீன்தயாள் துறைமுகம்.

4 இந்திய – சீனா உறவுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: சசி தரூர்

5 பின்வருபவைகளில் “BIMSTEC” அமைப்பில் உறுப்பினரல்லாத நாடு எது?

விடை: பிரேசில்

6 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியுள்ள முதல் நாடு எது ?

விடை: புரூண்ட்

7 மத்திய அரசின் சௌபாக்யா திட்டத்தின் கீழ் எந்த ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் இணைப்பு வழங்கப்படுவதற்கான இலக்குநிர்ணகிக்கப்பட்டுள்ளது.

விடை: 2019, மார்ச்

8 இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி யார்?

விடை: ஜோய்தா மாண்டல்

9 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நாடு எது?

விடை: ஜிபூட்டி

10 உலகில் அதிகம் பிளாஸ்டிக் உற்பத்தி சேயும் நாடு?

விடை: ஜெர்மனி

11 இந்திய இராணுவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

விடை: ஜனவரி 15

12 இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்?

விடை: பெட்ரோலியம்

13 இந்தியாவில் முதலாவது சைபர் குற்ற பிரிவு AASVAAST எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

விடை: குஜராத்

14 டெல்லி தேசிய தலைநகரமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?

விடை: 1991

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பொது அறிவு வினா விடைகள்..!

15 2019 கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் யார்?

விடை: ரோஹித் சர்மா

16 கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம்?

விடை: ஸ்டிக்ஸ் பேக்

17 மின்னியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?

விடை: நிகோலா டெஸ்லா

18 இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

விடை: கேரளா

20 உலக சூரிய ஆற்றல் வங்கியின் தலைமையகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

விடை: இந்தியா

21 அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் 100 சதவீதம் குழாய் நீர் இணைப்புகளை வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலம் எது?

விடை: தெலுங்கான

22 ஒவ்வொரு ஆண்டும் இந்திய மண்வள சுகாதார அட்டை தினமானது என்று அனுசரிக்கப்படுகிறது?

விடை: பிப்ரவரி 19

23 நீரைவிட அடர்த்தி குறைவாக கொண்ட கோள் எது?

விடை: சனி

24 இந்தியாவில் அதிக தரம் வாய்ந்த மைக்கா எந்த மாநிலத்திலில் இருந்து கிடைக்கிறது.

விடை: பீகார்

25 என்ற விரைவு சாலை நாட்டின் முதல் உயர்த்தப்பட்ட வனவிலங்கு பெருவழி பாதையை கொண்டிருக்கிறது.

விடை: டெல்லி – டேராடூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பொது அறிவு தமிழ் 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil