TNUSRB பொது அறிவு வினா விடைகள் | TNUSRB General Knowledge Questions and Answer in Tamil

Advertisement

 TNUSRB General Knowledge Questions and Answer in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொது அறிவு பதிவில் நாம் பார்க்க இருப்பது TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) நடத்தும் தேர்வுககளில் தொடர்ந்து கேட்கப்படும் பொது அறிவு வினா விடைகள் பற்றி தான். இந்த TNUSRB நடத்தும் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

TNUSRB பொது அறிவு வினா விடைகள்:

  1. குவி ஆடியில் (convex mirror) தோன்றும் பிம்பத்தின் தன்மை .?

விடை : நேரான சிறிய மாயபிம்பம் 

2. ரொட்டிச் சோடாவின் வேதியியல்  பெயர் என்ன.?

விடை : சோடியம் பை கார்பனேட் 

3. மனிதனின் தலைப்பகுதியில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பி எது.?

விடை : கபச் சுரப்பி (பிட்யூட்டரி)

4. எது “செல் பவர் ஹவுஸ்” என்று அழைக்கப்படுகிறது.?

விடை : மைட்டோகாண்ட்ரியா

5. BCG என்னும் தடுப்பூசி எந்த நோய் வராமல் இருக்க குழந்தைகளுக்கு போடப்படுகிறது.

விடை : காச நோய்

6. கங்கைகொண்டான் என்று தன்னை அறிவித்தவர் யார்.?

விடை : முதலாம் ராஜேந்திர சோழன்

7. சார்மினார் அமைந்துள்ள இடம்.?

விடை : ஹைதராபாத்

8. தென் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகம் இராஜகோபாலச்சாரியரால் எங்கு தொடங்கப்பட்டது.?

விடை : திருச்சி 

9. ‘அர்த்தசாத்திரத்தை’ எழுதியவர் யார்.?

விடை : சாணக்யா 

10. முதலாம் பானிப்பட் போரில் வெற்றி பெற்ற மன்னன் யார் .?

விடை : பாபர் 

11. தூத்துக்குடியில் இருந்து எந்த நாட்டிற்கு வ.உ.சி சுதேசி கப்பல் நிறுவனம் கப்பல் போக்குவரத்தை இயக்கியது.?

விடை : இலங்கை 

12. ‘சாதி’ ஒழிப்புக்காக உழைத்தவர் யார்.?

விடை : ராஜா ராம் மோகன் ராய் 

13. சுனாமி ஏற்படுவதன் காரணம்.?

விடை : கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம்

14. இந்தியாவில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது.?

விடை : கர்நாடகா 

15. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி எந்த வகையைச் சார்ந்தது.?

விடை : லிக்னைட் 

16. புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான டார்ஜிலிங் எந்த மாநிலத்தில் உள்ளது.?

விடை : மேற்கு வங்காளம் 

17. முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.?

விடை : திருநெல்வேலி 

18. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் யார்.?

விடை : ஜனாதிபதி 

19. தமிழ்நாட்டில் எத்தனை பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.?

விடை : 39

20. கூட்டுறவுத் துறையின் உதாரணம் எது.?

விடை : அமுல் 

21. ஏதாவது ஒரு பொருளின் திரவ நிலையில் இருந்து வாயுவாக மாறும் செயல்முறை என்ன?

விடை :  ஆவியாக்கம் (Evaporation)

22. நமது உடலில் மிக அதிகமாக காணப்படும் தனிமம் எது?

விடை : ஆக்சிஜன் (Oxygen).

23. போஸ்டுலேட் என்றால் என்ன?

விடை : நிரூபிக்க முடியாத ஆனால் உண்மையாக கருதப்படும் கோட்பாடு.

24. அசோக சக்ராவின் மொத்த வட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை : 24

25. முதல் இந்திய குடியரசுத் தலைவர் யார்?

விடை : டாக்டர். ராஜேந்திர பிரசாத்.

26. இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?

விடை : ரபீந்திரநாத் தாகூர்.

27. விஜயநகர பேரரசின் நிறுவனர் யார்?

விடை :  ஹரி ஹரா மற்றும் புக்கா ராயர்.

28. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

விடை : ராஜஸ்தான்.

29. பசுமை தொடர்புடையவர் யார்?

விடை : எம். எஸ். ஸ்வாமிநாதன்.

30.பேரரசு நிலை காற்றழுத்த மண்டலமாக விளங்குவது எது?

விடை : சமவெளிப் பகுதி (Equatorial Low Pressure Belt).

 TNPSC குரூப்-1 பொது அறிவு வினா விடைகள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

Advertisement