அதிக நேரம் தூங்கும் மக்கள் வசிக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?

Top 10 Countries For More Sleeping in Tamil

Top 10 Countries For More Sleeping in Tamil

இன்றைய பதிவில் உலகில் அதிகம் நேரம் தூங்கும் மக்கள் வசிக்கும் நாடுகள் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான ஓன்று. தூங்காமல் யாராலும் இருக்க முடியாது. அதுபோல சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். சிலர் குறைவாக தூங்குவார்கள். அந்த வகையில் அதிக நேரம் உறங்கும் நாடுகள் எது அதில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

உலகில் மிகப்பெரிய 10 நாடுகளின் பட்டியல்..! அது எந்தெந்த நாடுகள் தெரியுமா?

அதிக நேரம் உறங்கும் நாடுகள் எது..? 

நெதர்லாந்து: 

நெதர்லாந்து

இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன.  இந்த நாடு தான் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் வாழும் மக்கள் 8:10 மணி நேரம் வரை தூங்குகிறார்கள்.  

நியூசிலாந்து: 

நியூசிலாந்து

நியூசிலாந்து பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்த நாட்டின் தலைநகரம் வெலிங்டன் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் 8:06 மணி நேரம் தூங்குகிறார்கள். அதனால் இது அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியலில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

பிரான்ஸ்:

பிரான்ஸ்

பிரான்ஸ் அல்லது பிரெஞ்சு என்று அழைக்கக்கூடிய இது மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்ற கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும் மற்றும்  தீவுகளையும் கொண்ட நாடாகும்.

இந்த நாடு அதிக நேரம் உறங்கும் நாடுகளில் 3 ஆவது இடத்தில் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் 8:03 மணி நேரம் தூங்குகிறார்கள்.

விமான நிலையமே இல்லாத நாடுகள்

ஆஸ்திரேலியா: 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ளது. இது பெருநிலப் பரப்பையும், தசுமேனியா தீவு மற்றும் இந்திய பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு என்று சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியா அதிக நேரம் தூங்கும் நாடுகளின் பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டில் 8:01 மணி நேரம் வரை மக்கள் தூங்குகிறார்கள்.

பெல்ஜியம்:

பெல்ஜியம்

இது மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். பெல்ஜியம் அதிக நேரம் தூங்கும் நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் 8:01 மணி நேரம் வரை தூங்குகிறார்கள்.

கனடா:

கனடா

கனடா வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். இந்த நாடு அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் 7:58 மணி நேரம் உறங்குகிறார்கள்.

ஐக்கிய இராச்சியம் – United Kingdom:

ஐக்கிய இராச்சியம்

இது ஐக்கிய பேரரசு, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். பொதுவாக இந்த நாட்டை ஐக்கிய பேரரசு அல்லது UK – United Kingdom அல்லது பிரித்தானியா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாடு அதிக நேரம் உறங்கும் நாடுகளில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த United Kingdom என்ற நாட்டில் வசிக்கும் மக்கள் 7:54 மணி நேரம் தூங்குகிறார்கள்.

உலகில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?

அமெரிக்கா:

அமெரிக்கா

உலகில் புகழ்பெற்ற நாடுகளில் இதுவும் ஓன்று. அதிக நேரம் தூங்கும் நாடுகளில் அமெரிக்கா 8 ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்க நாட்டில் வசிக்கும் மனிதர்கள் 7:52 மணி நேரம் தூங்குகிறார்கள்.

ஜப்பான்: 

ஜப்பான்

ஜப்பான் அதிக நேரம் தூங்கும் நாடுகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் 7 மணி நேரம் 30 நிமிடம் வரை உறங்குகிறார்கள்.  

சிங்கப்பூர்:

சிங்கப்பூர்

இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.  அதிக நேரம் உறங்கும் நாடுகளில் சிங்கப்பூர் 10 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் 7:24 மணி நேரம் தூங்குகிறார்கள்.

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil