Educated Countries In The World in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் வாழும் இந்த உலகில் பல நாடுகள் இருக்கின்றன. மனிதனாக பிறந்த அனைவரும் கல்வி என்ற ஒன்றை கட்டாயம் கற்றிருக்க வேண்டும். கல்வி ஒரு மனிதனுக்கு அழியா செல்வமாக இருக்கிறது. இந்த உலகில் கல்வியில் தலை சிறந்து விளங்கும் நாடுகள் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் கல்வியில் தலைசிறந்து அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா |
கல்வியில் தலைசிறந்து விளங்கும் நாடுகள் எது..?
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒரு மனிதன் உயர்வதற்கு காரணமாக இருப்பது கல்வி தான். கல்வி மனிதனின் வளர்ச்சிக்கு மட்டும் முக்கியமானதாக இல்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வி முக்கியமானதாக உள்ளது. அதுபோல சில நாடுகளில் அதிகம் படித்த மக்கள் வசிக்கிறார்கள். படித்த மக்கள் வசிக்கும் நாடுகள் எது என்று பார்க்கலாம் வாங்க.
கனடா:
கனடா தான் கல்வி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடாக கனடா உள்ளது. கனடா நாட்டின் கல்வி அறிவு 60 சதவீதமாக உள்ளது. கனடா நாட்டில் தான் 89% மக்கள் இடைநிலை கல்வியை கற்றிருக்கிறார்கள்.
ரஷ்யா:
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யா கல்வியில் வெற்றி பெற்ற நாடாக உள்ளது. இது 145,805,947 மக்கள் தொகையை கொண்டுள்ளது. ரஷ்யா 50.70 % கல்வியில் சிறந்து விளங்குகிறது.
ஜப்பான்:
ஜப்பான் கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானில் வசிக்கும் குடிமக்கள் கணிதம் அறிவியல் மற்றும் பல பாடங்களை படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார்கள். 125,584,838 மக்கள் தொகையை கொண்ட ஜப்பான் 52.70 % கல்வியில் சிறந்து விளங்குகிறது.
லக்சம்பர்க்:
லக்சம்பர்க் என்னும் நாடு கல்வி நாடுகளின் பட்டியலில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. லக்சம்பர்க் நாட்டில் இருக்கும் மக்கள் பன்மொழி மற்றும் அடிப்படைக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி போன்றவற்றை கற்றுகொள்கின்றனர். இந்த நாடு 51.30% கல்வியில் புகழ் பெற்ற நாடாக இருக்கின்றது.
தென் கொரியா:
இந்த கல்வியின் பட்டியலில் தென் கொரியா 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நாடு 51,329,899 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது 50.70 % கல்வியில் சிறந்த நாடாக திகழ்கிறது.
இஸ்ரேல்:
இந்த நாடானது கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இஸ்ரேல் 8,922,892 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இது 50.10% கல்வியில் புகழ் பெற்ற நாடாக இருக்கிறது.
அமெரிக்கா:
உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. உலகிலேயே அதிகம் படித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 7 இடத்தைப் பிடித்துள்ளது. இது 334,805,269 மக்கள் தொகையை கொண்டு, 50.10% கல்வியில் சிறந்து விளங்குகின்றது.
அயர்லாந்து:
அயர்லாந்து கல்வியில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது 5,020,199 மக்கள் தொகையை கொண்டு மற்றும் 49.90 சதவீதம் கல்வியறிவு விகிதத்தில் உலகிலேயே மிகவும் படித்த நாடாக உள்ளது.
இங்கிலாந்து:
உலகில் அதிகம் படித்த நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இது 68,497,907 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்த நாடு 49.90% கல்வியில் சிறந்த நாடாக திகழ்கிறது.
ஆஸ்திரேலியா:
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 10 ஆவது இடத்தில் உள்ளது. இது 26,068,792 மக்கள் தொகையை கொண்டுள்ளது. உலகின் முதல் 10 படித்த நாடுகளின் பட்டியலை ஆஸ்திரேலியா நிறைவு செய்துள்ளது. இந்த நாடானது 49.30% சதவீத எழுத்தறிவு விகிதத்துடன் புகழ் பெற்ற நாடாக திகழ்கிறது.
உலகில் அதிகம் கடன் கொண்டுள்ள 10 நாடுகள் என்ன தெரியுமா ? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |