Top 3 Countries in the World has the Lowest Death Rate in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான படிப்பு மற்றும் அரசு வேலைகளுக்கும் பல போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால் தான் நமது பதிவின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் பொது. அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் உலகில் குறைவான இறப்பு விகிதம் கொண்டுள்ள 3 நாடுகள் பற்றி அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா
Which Countries has the Lowest Death Rate in the World in Tamil:
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் சகஜமான ஒரு விஷயம் ஆகும். பிறப்பு இருந்தால் கண்டிப்பாக இறப்பு இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாடுகளிலிலும் எவ்வளவு இறப்பு விகிதம் என்று கணக்கிடப்படுகிறது.
இப்பொழுது நாம் உலகிலேயே குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ள 3 நாடுகள் பற்றித்தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
1. கத்தார்:
நமது பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ள நாடு எதுவென்றால் அது கத்தார் தான். மேலும் இது தான் உலகிலேயே மிகவும் குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ள நாடு.
இங்கு ஆண்டில் 1000 பேருக்கு 1.53% இறப்புகள் தான் நிகழ்கின்றன. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த நாட்டின் மேம்படுத்தப்பட்ட சுகாதார அமைப்பு ஆகும். மற்ற நாடுகளை காட்டிலும் கத்தாரில் உள்ள சுகாதார துறையானது அதன் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் சிறந்த நோயாளி பராமரிப்புகளை வழங்குவதில் புகழ்பெற்றது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
2. ஐக்கிய அரபு நாடுகள்:
நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது ஐக்கிய அரபு நாடுகள் தான். இங்கு ஆண்டில் 1000 பேருக்கு 1.97% இறப்புகள் தான் நிகழ்கின்றன. இதற்கான முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் இங்குள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார அமைப்பு தான்.
மற்ற நாடுகளை காட்டிலும் இங்குள்ள சுகாதாரத் துறையானது மேம்பட்டுள்ளது. அதனால் தான் இங்கு இறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.
3. குவைத்:
அடுத்து நமது பட்டியலில் மூன்றாவது இடத்திலிருப்பது குவைத் தான். இங்கு ஆண்டில் 1000 பேருக்கு 2.18% இறப்புகள் தான் நிகழ்கின்றன. குவைத்தில் குறைந்த இறப்பு விகிதங்கள் இருப்பதற்கான முக்கியமான காரணம் அங்குள்ள மருத்துவ சேவைகள் மற்றும் குடிமக்களிடையே உயர் சுகாதார விழிப்புணர்வு தான்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |