கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா..?

Advertisement

Top 3 Countries that Give Free Education in the World in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே கல்வி என்பது மிக முக்கியான ஒன்றாகி விட்டது. அதனால் அனைவருமே தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் முயற்சிக்கிறார்கள். அதற்காக அதிக அளவு செலவும் செய்கிறார்கள். அதனால் சில இடங்களில் கல்வி என்பது வியாபாரம் ஆகியுள்ளது. இந்நிலையில் கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை எந்தெந்த நாடுகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்ன சொல்லுறீங்க எந்த படிப்பு படிச்சாலும் IT வேலை கிடைக்குமா அது எப்படி

 Which Countries Provide Free Education in Tamil:

பொதுவாக கல்வி என்பது அனைவரின் வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியை சில இடங்களில் வியாபாரம் ஆக்கி கொண்டுள்ளார்கள்.

ஆனால் ஒரு சில நாடுகள் கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கின்றன. அவற்றிலிருந்து டாப் -3 நாடுகளை பற்றி இங்கு காணலாம்.

1. பின்லாந்து:

Free education country in the world in tamil

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் நாடுகளில் முதலாவது இடத்தில் இருப்பது பின்லாந்து நாடு தான். ஆனால் இங்கு இலவசக் கல்வியைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

மேலும் இங்கு EU (ஐரோப்பிய ஒன்றியம்) மற்றும் உள்நாட்டு மாணவர்கள் பின்லாந்தில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் பூஜ்ஜிய கல்விக் கட்டணத்தில் உயர் கல்வியைத் தொடரலாம்.

ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் படிப்புகளைப் படிக்கும் சர்வதேச மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை இல்லை உயர்கல்வித்துறை அரசு வெளியிட்டுள்ளது

2. டென்மார்க்:

Which countries gives free education in the world in tamil

கல்வியை இலவசமாக அளிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது டென்மார்க் தான். அதாவது டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்), டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ளவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஆனால் சர்வதேச மாணவர்கள் இந்த நாட்டில் கட்டாயம் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.

3. ஸ்வீடன்:

Which countries provide free education in tamil

கல்வியை இலவசமாக அளிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஸ்வீடன் நாடு தான். ஸ்வீடனில் உயர்தரக் கல்வியுடன் கூடிய உயர் தரவரிசையில் உள்ள பல ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஸ்வீடனில் EU (ஐரோப்பிய யூனியன்) நாட்டு மாணவர்களுக்கு மற்றும் உள்நாட்டு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற சர்வதேச நாடுகளின் மாணவர்கள் தங்கள் பெரும் கல்விக்கான கல்விக் கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> B.sc Biotechnology பட்டப்படிப்பை படிப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement