இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா..?

Top 5 Richest City in India in Tamil

Top 5 Richest City in India in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் மாணவ மாணவிகளுக்கும் பயன்படும் வகையில் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்ததெந்த நகரம் என்றும் அவை ஏன் மிகவும் பணக்கார நகரங்களாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

இந்தியாவின் Top 5 பணக்கார நகரங்கள் எவை..?

சர்வதேச முதலீட்டு இடம் பெயர்வு நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. அதாவது நியூ வேர்ல்ட் வெல்த் என்ற செல்வ நுண்ணறிவு நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரவுத் தொகுப்புகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியானது.

அதாவது ஒரு நகரில் எத்தனை பில்லியனர்கள் உள்ளனர் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் இந்தியாவின் 5 பணக்கார நகரங்களும் இடம் பெற்றுள்ளன. அவை தான் இந்தியாவின் முதல் 5 பணக்கார நகரங்கள் ஆகும். அவை எந்தெந்த நகரங்கள் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மும்பை:

Richest cities in india by gdp in tamil

இந்தியாவின் நிதி தலைநகரம் மற்றும் இந்தியாவின் பணக்கார பில்லியனர்களின் தாயகம், மும்பை நாட்டின் முதல் பணக்கார நகரமாகும். உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் $310 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 59,400 மில்லினர்களுடன் 21- வது இடத்தில் உள்ளது.

முதன் முதலில் எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது தெரியுமா

டெல்லி:

Richest cities in india by gdp in tamil

இந்தியாவின் தலைநகரான டெல்லி, நாட்டின் இரண்டாவது பணக்கார நகரமாகும். கடந்த ஓராண்டில் 66% வளர்ச்சி கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் 293.6 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 30,200 மில்லினர்களுடன் 36-வது இடத்தைப் பிடித்ததுள்ளது.

பெங்களூர்:

Top 5 richest cities in india by gdp in tamil

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு தான் இந்தியாவின் மூன்றாவது பணக்கார நகரமாகும். உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் $150.1 பில்லியன் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 12,600 மில்லினர்களுடன் 60- வது இடத்தில் உள்ளது.

இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்

கொல்கத்தா:

Richest cities in india in tamil

இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தா இந்தியாவின் நான்காவது பணக்கார நகரமாகும். 2023 ஆம் ஆண்டின் உலகின் பணக்கார நகரங்களின் தரவரிசையில் $110 பில்லியன் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 12,100 மில்லினர்களுடன் 63-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹைதராபாத்:

Top 5 richest cities in india in tamil

ஹைதராபாத் இந்தியாவின் தெற்கு மாநிலமான தெலுங்கானாவின் தலைநகரம் ஆகும். இது இந்தியாவின் ஐந்தாவது பணக்கார நகரம் ஆகும். சர்வதேச பணக்கார நகரங்களின் தரவரிசையில் $78.6 பில்லியன் மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 11,100 மில்லினர்களுடன் 65-வது இடத்தை பிடித்துள்ளது.

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil