உலகில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா..?

Top 5 Richest City in the World in Tamil

தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பொது அறிவு மற்றும் பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது கிடைத்து விடும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உலகிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

உலகின் Top 5 பணக்கார நகரங்கள் எவை..?

அதாவது பணம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதாவது இன்றைய சூழலில் பணம் இல்லை என்றால் அவர் மனிதனாக மதிக்க மாட்டார்கள்.

அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான பணத்தை நம்மில் யார் அதிகம் வைத்திருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் இடையில் போட்டியும் ஆர்வமும் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் நாம் அனைவருக்குமே உலகில் எத்தனை பணக்கார நகரம் உள்ளது என்றும் அதில் நாம் வாழும் நகரம் உள்ளதா என்று அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

அதனால் சர்வதேச முதலீட்டு இடம் பெயர்வு நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள Top 5 நகரங்கள் தான் உலகின் Top 5 பணக்கார நகரங்கள் ஆகும். அவை எந்தெந்த நகரங்கள் என்று விரிவாக இங்கு காணலாம்.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா

நியூயார்க் நகரம்:

Which is the top 5 richest cities in the world in tamil

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமேரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் ஆகும். இது தான் உலகின் மிகவும் பணக்கார நகரம் ஆகும். இங்கு 724 சென்டி மில்லியனர்கள், 58 பில்லியனர்கள் மற்றும் 3.4 லட்சம் மில்லியனர்கள் வாழ்கின்றனர்.

மேலும் இங்கு உலகின் இரண்டு பெரிய பங்குச் சந்தைகள் உள்ளன. இங்கு வாழும் நகரவாசிகளும் வைத்திருக்கும் மொத்த தனியார் செல்வம் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டியுள்ளது.

டோக்கியோ:

Which is the top 5 richest cities in the world

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜப்பானின் தலை நகரமான டோக்கியோ தான். இங்கு 290,300 மில்லியனர்கள், 250 சென்டி மில்லியனர்கள் மற்றும் 14 பில்லியனர்கள் உள்ளனர்.

மிகச்சிறிய நாட்டில் உள்ள மிகவும் சிறிய நகரமான டோக்கியோவில் 1.5 டிரில்லியன் டாலர் உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது.

விரிகுடா பகுதி:

Richest Cities in the World in Tamil

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது சான் பிரான்சிஸ்கோ நகரம் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிகுடா பகுதி தான். இங்கு 285,000 மில்லியனர்கள் உள்ளனர், அதே போல் 629 சென்டி மில்லியனர்கள் உள்ளனர்.

மேலும் உலகின் பெரும்பாலான சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு தான் உள்ளன. அதாவது Adobe, Apple, Cisco, Facebook (Meta), Google (Alphabet), HP, Intel, LinkedIn, Lyft, Netflix, OpenAI, PayPal, Twitter, Uber, Yahoo மற்றும் Zoom உட்பட பல நிறுவனங்கள்.

இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே Top 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா

லண்டன்:

Top 5 Richest Cities in the World in Tamil

லண்டன் இங்கிலாந்தின் பணக்கார நகரம் ஆகும். ஆனால் உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் இது நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் இது 2000 ஆம் ஆண்டு உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளில் இது பட்டியலில் பின் தங்கி விட்டது. ஆனாலும் இங்கு 258,000 மில்லியனர்கள், 384 சென்டி மில்லியனர்கள் மற்றும் 36 பில்லியனர்கள் உள்ளனர்.

சிங்கப்பூர்:

Which is the richest cities in the world in tamil

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது உலகின் வணிக நட்பு நகரமான சிங்கப்பூர் தான். இது கோடீஸ்வரர்கள் இடம்பெயர்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

சமீபத்திய ஹென்லி வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் படி 2022 ஆம் ஆண்டில் சுமார் 2,800 உயர் நிகர மதிப்புள்ள நபர்கள் அங்கு குடி பெயர்ந்துள்ளனர். தற்பொழுது இங்கு 240,100 மில்லியனர்கள், 329 சென்டி மில்லியனர்கள் மற்றும் 27 பில்லியனர்கள் உள்ளனர்.

முதன் முதலில் எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil