வருமான வரி
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு மாதிரியான சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் சில நாட்டில் பள்ளியில் தேர்வு இருக்காது, வீட்டு பாடங்கள் இருக்காது இது போன்றவற்றையினை நாம் அறிந்து இருப்போம். அந்த வகையில் இன்று வருமானவரி இல்லாத டாப் 5 நாடுகளை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அது எப்படி வருமானவரி செலுத்தாமல் இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை தான். ஏனென்றால் இதுபோன்ற நாடுகளும் இருந்து வருகிறது தான். ஆகையால் இன்று வருமானவரி இல்லாத டாப் 5 நாடுகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
Top 5 Tax Free Countries in the World
பஹாமாஸ் நாடு:
உலகின் வருமான வரி இல்லாத நாடுகளில் முதல் நாடு பஹாமாஸ் நாடு தான். இந்த நாட்டின் அழகும் மற்றும் பொருளாதாரமும் நிறைந்து காணப்படுவதால் இங்கு வருமான வரியினை அந்நாட்டு அரசு பெறுவது இல்லை.
ஆனால் இந்த நாட்டில் நீங்கள் வசிக்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் சுமார் தோராயமாக 1,77,50,000 ரூபாய்க்கு சொத்து வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
புருனே நாடு:
புருனே நாட்டில் உள்ள மக்கள் யாரும் வருமானவரி செலுத்த வேண்டாம். ஏனென்றால் மலேசியாவில் உள்ள போர்னியோவில் காணப்படும் ஒரு தீவில் தான் கச்சா எண்ணெய் ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வருமானவரி என்பதே செலுத்த தேவையில்லை.
குவைத் நாடு:
குவைத் நாட்டிலும் எண்ணெய் வளங்கள் மற்றும் அதிக அளவில் மக்களின் நாகரிகமும் நிறைந்து இருப்பதால் இந்த நாட்டில் யாரும் வருமானவரியினை செலுத்துவது இல்லை.
மேலும் குவைத்தில் அந்த நாட்டில் உள்ள மக்களை விட பிற நாட்டில் உள்ள மக்கள் தான் அதிகமாக வசிக்கிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. அதுபோல குவைத்தில் நாம் வசிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் கட்டாயமாக ஏதோ ஒரு வேலை இருக்க வேண்டும்.
உலகில் புவிஈர்ப்புவிசை இல்லாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. |
பஹ்ரைன் நாடு:
பஹ்ரைன் ஆனது முதல் முதலில் நிலத்தில் எண்ணெயினை கண்டுபிடித்த நாடாக இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் இந்த பஹ்ரைன் நாடு ஆனது வருமானவரி இல்லாத நாடாகவும் இருந்கிறது.
இந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அதிகமாக இருப்பதால் வருமானவரி செலுத்தத்தேவையில்லை என்றாலும் கூட அந்த நாட்டில் 25 ஆண்டிற்கும் அதிகமாக வசித்தால் அரபு மொழியினை தெளிவாக பேசினால் மட்டுமே குடியுரிமை பெறலாம்.
கெய்மன் தீவு:
இயற்கை அழகினையும் மற்றும் அழகிய கடற்கரையினையும் கொண்டுள்ள கெய்மன் தீவில் வருமானவரி என்பதனை செலுத்த வேண்டாம். ஏனென்றால் அந்த நாட்டில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமாக அதிக வருமானம் வருகிறது என்பது தான் உண்மை.
மேலும் அந்த நாட்டில் நீங்கள் வாழ வேண்டும் என்றால் 1,01,50,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒உலகில் அதிகம் படித்த மக்கள் இருக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |