பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது..?

Advertisement

பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த உலகில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த நாடுகளில் சூரியன் மறையாதாம்..! உங்களுக்கு தெரியுமா..?

பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது..? 

 milk production country in tamil

 நம் இந்தியா தான் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடாக விளங்குகிறது.   

நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நம் அன்றாட தேவைகளில் பால் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காலையில் எழுந்ததும் நாம் தேடுவது பாலை தான். டீ, காபி குடிக்காமல் யாராலும் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் மற்ற பொருட்களை போலவே பாலும் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இருந்தாலும் பால் உற்பத்தியில் நம் இந்தியா தான் முதலிடத்தை பிடித்துள்ளது. 1970 ஆம் ஆண்டுகளில் நம் இந்தியா 5 ஆவது இடத்தில் இருந்தது. அப்போது இந்தியா 20 மில்லியன் டன் மட்டுமே பால் உற்பத்தியை வழங்கியது.

பின் 1991 ஆம் ஆண்டில் இந்தியா பால் உற்பத்தில் முதலிடத்தை பிடித்தது. 1991 இல் இருந்து இன்று வரை இந்தியா தான் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 23.5 சதவீதமாக இருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவில் பால் உற்பத்தி 2 மடங்கு அதிகரித்து 45 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement