உலக கவிதை நாள் | Ulaga Kavithai Naal
வணக்கம் நண்பர்களே இன்று பொது அறிவு பதிவில் உலக கவிதை நாள் எப்போது என்பதை பற்றியும் முக்கியமான தகவல்களை பற்றியும் பார்க்க போகிறோம். கவிதை என்றால் என்ன..? வார்த்தைகளின் அலங்காரம் தான் கவிதை. சொல்ல முடியாத அன்பையும் உணர்வையும் கவிதை மூலம் வெளிபடுத்துவார்கள். சொல்ல முடியாத விசயங்களையும் அர்த்தங்களை அழகாக புரிய வைப்பது கவிதை. பிரிந்து கிடக்கும் வார்த்தைகளை ஒன்றாக்கி இரு வரிகளில் அழகாக வாழ்கையை புரிய வைக்கவும் கவிதை உதவுகிறது.
உலக சுற்றுலா தினம் எப்போது? |
உலக கவிதை தினம்:
- உலக கவிதை தினம் கடந்த 1999 ஆம் ஆண்டில் மார்ச் 21 தேதியை யுனெஸ்கோ அறிவித்தது.
- 1999 பாரிஸ் நகரில் 30 வது பொது மாநாட்டில் நடக்கும் பொழுது அந்த மாநாட்டில் யுனெஸ்கோ மார்ச் 21 தேதி உலக கவிதை நாள் என்று அறிவித்தது. அதனை ஐக்கிய நாடு சபை ஏற்றுகொண்டனர்.
மார்ச் 21 என்ன தினம்:
- காடுகள் அதிகம் அழிக்கப்படுவதால் அதிகம் வெப்பம் நிலவுகிறது அதனால் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மார்ச் 21 உலக காடுகள் தினமாக கொண்டாப்படுகிறது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுகொண்டனர்.
- உலகில் அனேக இடங்களில் இனம் பாகுபாடு, இனவெரிகொலை போன்ற நிலைக்கு உலகம் உள்ளது இதுபோல் இனி சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதை யுனெஸ்கோ தெரிவித்தது. மனிதனின் நலனை கருத்தில் கொண்டு ஐ நா சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.
- உலக டவுன் சிண்ட்ரோம் தினம்.
- சர்வதேச நவ்ரூஸ் தினம்.
- சர்வதேச கைது மற்றும் காணாமல் போன பணியாளர்களின் ஒற்றுமை தினம்.
உலக கவிதை தினம் கவிதைகள்:
மற்றவர்களுக்கு மார்ச் 21 அன்று கவிதை தினம்..!
தினம் கவிதை எழுதி ரசிப்பவர்களுக்கு
ஒவ்வொரு நாளும் கவிதை தினம் தான்.
முக்கிய தினங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள | CLICK HERE>> |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |