உலகின் மிகப் பெரிய கண்டம்?

Advertisement

Ulagin Migaperiya Kandam Ethu

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு டாபிக்கில் இந்த உலகின் மிக பெரிய கண்டம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு தொடர்பான விஷயங்களை நாம் தினமும் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இந்த உலகத்தை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அரசு நடத்தும் பொது தெரிவுகளில் கலந்துகொள்ளும் கொள்ளும் பொது நமக்கு இது போன்ற விஷயங்கம் மிகவும் கைகொடுக்கும். சரி வாங்க இந்த உலகின் மிகப் பெரிய கண்டம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உலகின் மிகப் பெரிய கண்டம்?

விடை: ஆசியா கண்டம்.

ஆசியா கண்டம் பற்றிய சில தகவல்கள்:

சியா உலகின் மிகப் பெரிய, அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும்.

இது பூமியின் கிழக்கு, வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும்.

பூமியின் மொத்தப் பகுதியில் 8.7% பரப்பளவு அடங்கியது.

உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும்.

கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் இதன் எல்லைகளாக அமைந்து உள்ளன.

மேலும் இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும், காக்கேசிய மலைகள், காஸ்ப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.

ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா என 6 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆசியாக் கண்டத்தில் 49 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 59 நாடுகள் அடங்கியுள்ளன.

உலகின் அதிக நிலப்பரப்பு கொண்ட நாடு எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement