உலகின் மிக உயர்ந்த சிகரம் எது? | Ulagin Migaperiya Sigaram

Advertisement

உலகின் மிக உயரமான சிகரம் எது | World Largest Everest in India in Tamil

வணக்கம் பொதுநலம் வாசகர்களே. உலகின் மிக உயர்ந்த சிகரம் எது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு பற்றிய அறிவு திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இளம் வயதிலிருந்து இது போன்ற விஷயங்களை தெரிந்துக்கொள்வதால் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறவர் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும். அரசு நடத்தும் தேர்வுகளில் இது மாதிரியான பொது அறிவு கேள்விகள் தான் பெரும்பாலும் கேட்கப்படும். வாசகர்களின் நலன் கருதி எங்கள் பொதுநலம்.காம் பதிவில் தினம்தோறும் பல தரப்பட்ட பொது அறிவு வினா விடைகளை பதிவு செய்து வருகிறோம். படித்து நன்மை அடையுங்கள்.

உலகின் மிகப்பெரிய தீவு

உலகின் மிக உயர்ந்த சிகரம் எது?

விடை: உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் மலை. 

எவரெஸ்ட் மலை:

இன்றும் எவரெஸ்ட் மலையை பல மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். உலகின் மிக உயரமான மலை என்று நாம் கூறும்போது கடல் மட்டத்திலிருந்து உயரத்தை கணக்கீட்டு பார்ப்போம். இந்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8849 மீட்டர் அடிக்கு மேல் அப்பாற்பட்டது.

உலகில் மற்ற சிகரங்களை விட வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள மலை எவரெஸ்ட். சீனா மற்றும் நேபாளத்தின் நிலப்பகுதிகளில் விரிந்து காணப்படும் எவரெஸ்ட் சிகரத்தை இந்த இருநாடுகளின் தரைப்பகுதியிலிருந்தும் ஏற முடியும்.

உயரத்தை அளவிடும் கருவியை பொருத்துவதற்காக எவரெஸ்டின் உச்சிக்கு சென்ற ஹிம்லால் கெளதம், அப்போது நிலவிய உறைபனியின் காரணமாக தனது கால் விரலை அவர் இழந்தார்.

உலகின் மிகப்பெரிய அணை எது

ஒவ்வொரு கண்டத்திலும் மிக உயரமான மலைகள்:

  1. ஆசியாவில் – எவரெஸ்ட் சிகரம் (8,849 மீட்டர்).
  2. வி தென் அமெரிக்கா- அக்கோன்காகுவா மலை (6,961 மீட்டர்).
  3. வி வட அமெரிக்கா- மெக்கின்லி மலை (6,190 மீட்டர்).
  4. ஆப்பிரிக்காவில் – கிளிமஞ்சாரோ மலை (5,895 மீட்டர்).
  5. ஐரோப்பாவில் – எல்ப்ரஸ் மலை (5,642 மீட்டர்)
  6. அண்டார்டிகாவில் – வின்சன் மாசிஃப் (4,897 மீட்டர்).

எவரெஸ்ட் அமைந்துள்ள இடம்:

எவரெஸ்ட் சிகரம், ஆசியாவின் இமயமலையில் திபெத் மற்றும் நேபாள எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement