உலகின் மிகப்பெரிய தீவு | Ulagin Migaperiya Theevu in Tamil

Advertisement

உலகின் மிகப்பெரிய தீவுகள் | Ulagin Migaperiya Theevu in Tamil

இன்றய பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கம்..இந்த உலகில் நாம் அனைவருமே ஆச்சரியம்படும் அளவிற்கு பலவிஷயங்கள் ஒளிந்துள்ளது. அதாவது இவ்வுலகில் அழகான, அதிசயமான மற்றும் ஆபத்தான விஷயங்கள் இருக்கின்றன, அவற்றை நாம் தெரிந்துகொள்ளும் போது  மிகவும் விசித்திரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பிரபஞ்சத்தில் பலவகையான தீவுகள் இருக்கின்றன. அந்த அனைத்து தீவுகளிலும் மனிதர்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது. சில வகையான தீவுகளில் மனிதர்களும், சில வகையான தீவுகளில் பாம்புகள் மற்றும் மிருகங்கள் வாழ்கின்றன. அதன்படி இன்று நாம் படித்து தெரிந்துகொள்ள இருப்பது உலகின் மிக பெரிய தீவு எது? உலகின் மிகப்பெரிய தீவு என கிரீன்லாந்து அழைக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் உலகின் மிகப்பெரிய 10 தீவுகளை (Top 10 World Largest Islands) பற்றி நாம் தெரிந்து கொள்வோம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

1. மிக பெரிய தீவு கிரீன்லாந்து – Greenland:-

Greenland

கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட கனடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். இந்த தீவில் மனிதர்கள் வாழ்கின்றன. பனிப்படலம் மற்றும் கனிம வளம் மிகுந்த தீவு இது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> உலகின் மிக ஆபத்தான இடங்கள்

2வது மிக பெரிய தீவு நியூ கினியா – New Guinea:

New Guinea

நியூ கினியா தீவு ஆஸ்திரேலிய கண்டத்தின் அருகில் உள்ளது. இது ஆஸ்திரேலிய கண்டத்தைச் சார்ந்தது. ஒரே தீவு என்றாலும் பப்புவா, மேற்கு பப்புவா என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தீவுக்கு என பழங்கால வரலாறு உள்ளதாம்.

3வது மிக பெரிய தீவு போர்னியோ – Borneo:

Borneo

போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. இந்த தீவுவை மலேசியா, இந்தோனேசியா, புரூணை ஆகிய நாடுகள் ஆளுமையை பகிர்ந்து கொண்டு உள்ளது. இந்த தீவு பழமையான மலைப்பகுதிகளை கொண்டு உள்ளது. மேலும் உலகின் பழமையான தாவரங்களும், விலங்குகளும் இந்த தீவில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

4வது உலகின் மிக பெரிய தீவு மடகாஸ்கர் – Madagascar:

Madagascar

மடகாஸ்கர் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆப்ரிக்க கண்டத்தை ஒட்டி அமைந்து உள்ளது. இந்த தீவு குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கலாம் என இன்று வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆதாரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரி மன்னன் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற தேவவாக்கு விலங்கு என்ற தேவாங்கு இனம் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தேவாங்கு பொதுவாக தமிழகம் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும். அப்படிப்பட்ட லெமூர் வகை இனம் கண்டங்களின் இடப்பெயர்ச்சியின் போது இடம்பெயர்ந்து இருக்கலாம் என எண்ணப்படுகிறது.

5. பாஃபின் தீவு – Baffin Island:

Baffin Island

பாஃபின் தீவு கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. பனிக்கட்டி பறைகள் கிரீன்லாந்து, பாப்பின் தீவுகளில் முதலில் உருவாகி இருக்காலம் என கண்டறியப்பட்டு உள்ளது. இது கனடாவின் பெரிய தீவு என அழைக்கப்படுகிறது. உலகின் ஐந்தாவது பெரிய தீவு இதுவாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> உலகின் மிக ஆபத்தான நாய்கள்

6. சுமத்ரா – Sumatra:

சுமத்ரா தீவு இந்தோனேசியா அருகில் அமைந்து உள்ளது. மொத்தம் 171,068 சதுர பரப்பளவைக் கொண்டு உள்ளது. 2004-ல் சுனாமி இந்த தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மூலம் உருவானது. அங்கு இருந்து பலநாடுகளில் பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

7. ஹொன்ஷூ – Honshu:

ஹான்சு (ஹொன்ஷூ) என அழைக்கப்படும் இந்த தீவு ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக அளவில் 7-வது பெரிய தீவு. இது ஒரு அபாயகரமான தீவு. அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படும். எனவே இங்குள்ள மக்கள் எப்பொழுதுமே தங்களை நிலநடுக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.

8. விக்டோரியா தீவு – Victoria Island:

விக்டோரியா தீவு 83,897 சதுர மைல் பரப்பளவை கொண்ட உலகின் எட்டாவது பெரிய தீவு. இதுவும் கனடாவின் ஆர்டிக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றாகும். விக்டோரியா, தீவுக்குள் தீவு, அதற்குள் மேலும் ஒரு தீவு எனக்கொண்டுள்ளது. இது கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய தீவு என அழைக்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

9. கிரேட் பிரிட்டன் – Great Britain:-

பிரித்தானியா என அழைக்கப்படும் கிரேட் பிரிட்டன் தீவு 80,823 சதுரமைல் பரப்பளவை கொண்டு உள்ளது. இது மக்கள் தொகை அதிகம் கொண்ட மூன்றாவது தீவு. பரப்பளவில் உலகின் 9-வது பெரிய தீவு. ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த இது உலக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்பொழுது லண்டனை தலைமையகமாக கொண்டு யுனைட்டெட் கிங்டம் என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள் இந்த தீவுகளில் தான் உள்ளன.

10. எல்லேஸ்மியர் – Ellesmere Island:-

75,767 சதுர மைல் பரப்பளவை கொண்ட எல்லேஸ்மியர் தீவு கனடாவின் ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்து உள்ளது. ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் இதுவும் ஒன்று. கனடாவின் மூன்றாவது பெரிய தீவு இது. உலகின் பத்தாவது பெரிய தீவு இது. இத்தீவு முழுவதுமே மலைத்தொடர் சூழ்ந்து காணப்படுகிறது. ஆர்க்டிக் வில்லோ என்ற மரவகை மட்டுமே இங்கு வளரும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement