உலகின் உயரமான முருகன் சிலை | Ulagin Uyaramana Murugan Silai

Advertisement

மிகப்பெரிய முருகன் சிலை | World Tallest Murugan Statue in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம், நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகின் மிக உயரமான முருகன் சிலை எது என்று தெரிந்து கொள்வோம். நம்முடைய நாட்டில் கடவுளின் மேல் பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும், ஆனால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முருகனை பிடிக்கும் என்றே சொல்லலாம், அதிலும் குறிப்பாக அவருடைய வாகனம் பார்ப்பவர்களின் மனதை கவரும் வகையில் இருக்கும். சரி வாங்க உலகின் உயரமான முருகன் சிலை எது என்று தெரிந்து கொள்ளலாம்.

உலகின் உயரமான முருகன் சிலை:

விடை: சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாகும்.

சேலம் முருகன் சிலை:

  • World Tallest Murugan Statue in Tamil: இந்த முருகன் சிலை சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம் பாளையம் அருகில் உள்ளது. இந்த சிலை 146 அடி உயரத்தை கொண்டுள்ளது.
  • புத்திரகவுண்டம் பாளையம் பெத்தநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோவில் உள்ளது என்றே சொல்லலாம்.
  • இந்த சிலையை கட்டுவதற்கு 2016-ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. இதனை வடிவமைத்தவர் மலேசியாவில் முருகன் சிலை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் ஆவார். முருகன் சிலைக்கு கடந்த ஏப்ரல் 6-ம் (06.04.2022) தேதி குடமுழுக்கு நடைபெற்றது.
  • முருகனின் சிலையில் தங்க கவசம் சாற்றப்பட்டுள்ளது. முருகன் சிலையின் வலது கையில் ஓம் வரைந்து ஆசிர்வதிப்பது போலவும், இடது கையில் வேல் பிடித்து, மணிமகுடம் சூடி சிரித்த முகத்துடன் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்.
  • சிலைக்கு தீட்டப்பட்டிற்கும் வண்ணங்கள் யாவும் மக்களின் உள்ளத்தை கொள்ளையடித்து கொண்டு போகும் அளவிற்கு உள்ளது.
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

Tallest Murugan Statue in Tamil:

  • ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
  • பக்தர்கள் முருகனை அருகில் இருந்து பார்ப்பதற்கு ஏதுவாகவும், பாலாபிஷேகம் செய்வதற்கு ஏதுவாகவும் இந்த சிலைக்கு பின்புறம் லிப்ட் வசதி உள்ளது, அதை உபயோகப்படுத்தி மக்கள் முருகனை வழிபடலாம்.
  • மேலும் இந்த இடம் மக்களின் சுற்றி பார்க்கும் விதமாக சுற்றுலாத்தளமாக மாறலாம்.
  • இதற்கு முன்னர் மலேசியாவில் உள்ள முருகன் சிலை 142 அடி உயரத்தை கொண்டுள்ளது. ஆனால் இப்போது கட்டப்பட்டுள்ள முருகன் சிலை 146 அடி என்பதால் இந்த சிலை தான் உலகின் மிக உயரமான சிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.
உலகின் உயரமான கட்டிடம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement