Uttarakhand GK Questions in Tamil
இந்த பதிவில் உத்திரகாண்ட் பற்றிய பொது அறிவு வினா விடை (General Knowledge Questions and Answers in Tamil Uttarakhand Tamil) பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக பொது அறிவு சம்மந்தப்பட்ட தேர்வுகள் வரும் போது மட்டும்தான் நாம் பொதுஅறிவு வினாக்களை படிப்போம். அப்படி பார்த்தால் நீங்கள் படிக்கும் பொதுஅறிவு வினாக்கள் தேர்வு எழுதும் வரையில்தான் நியாபகம் இருக்கும். அதன் பிறகு மறந்து விடுவீர்கள். ஆகையால், நீங்கள் தேர்விற்கு தினமும் படித்து கொண்டிருந்தால் தான் நீங்கள் பயமின்றி தேர்வு எழுதுவீர்கள் நீங்கள் பொது அறிவு வினாக்களை தினமும் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.
உத்திரகாண்ட் என்பது இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்திரகாண்ட் ,மாநிலம் ஆகும். அழகிய மலைகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு உலக புகழ் பெற்றது. 2000ஆம் ஆண்டில் உத்திரகாண்ட் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தனியாக உத்திரகாண்ட் மாநிலம் உருவானது. உத்திரகாண்ட் வடக்கு நிலம் என்று மற்றொரு பெயரும் உண்டு. அந்த வகையில் இன்றைய பதிவில் உத்திரகாண்ட் பற்றிய பொது அறிவு வினா விடைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..
உத்திரகாண்ட் பற்றிய பொது அறிவு வினா விடை:

1. உத்திரகாண்டில் உள்ள அவுலி யில் குளிர்கால பனி விளையாட்டு எப்போது தொடங்கியது?
விடை :1987
2. உத்திரகாண்ட் தலைநகரம் எது ?
விடை : டேராடூன் மற்றும் பரதேவ் சாய்ன்
3. உத்திரகாண்டில் மிக உயரமான சிகரம் எது?
விடை : நந்தா தேவி
4. கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித தளங்கள் எங்கு அமைந்துள்ளன?
விடை : உத்திரகாண்ட்
5. உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகள் யாவை ?
விடை : யமுனை , கங்கை ,அலக்நந்தா மற்றும் பிண்டார்
6. உத்திரகாண்ட் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
விடை : சமஸ்கிருதம்
7. உத்திரகாண்ட் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை : உத்தராஞ்சல்
8. உத்தராங்கல் என்ற பெயரை வழங்கிய அரசியல் கட்சி எது ?
விடை : பாரதிய ஜனதா கட்சி
9. உத்திரப்பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல் எப்போது பிரிக்கப்பட்டது?
விடை : நவம்பர் 9,2000
10. இந்தியாவில் 27 வது மாநிலம் எது ?
விடை : உத்திரகாண்ட்
11. ராம்பூர் திராஹா துப்பாக்கி சூடு எப்போது நிகழ்ந்தது?
விடை : 1994
12. தேவபூமி என்பதன் அர்த்தம் என்ன ?
விடை : கடவுள்களின் நிலம்
13. குமாவோன் இராச்சியத்தின் கொடி நிறம் என்ன ?
விடை : சிவப்பு மற்றும் வெள்ளை
13. கார்வல் இராச்சியத்தின் கொடி நிறம் என்ன ?
விடை : பச்சை மற்றும் வெள்ளை
14. உத்திரகாண்டில் பேரழிவை ஏற்படுத்திய இமயமலை சுனாமி எப்போது ஏற்பட்டது?
விடை : ஜூன் 2013
15. உத்திரகாண்டில் சிப்கோ இயக்கம் எப்போது நடைபெற்றது?
விடை : 1970
16. உத்திரகாண்டின் மொத்த பரப்பளவு ?
விடை : 53,483 கி.மீ2
17. உத்திரகாண்டின் கோடைக்கால தலைநகரம் எது ?
விடை : கெய்ர்சைன்
18. இந்திய ராணுவ அகாடமி எங்கு அமைந்துள்ளது?
விடை : டேராடூன்
19. உத்திரகாண்டில் டிஃபான் டாப் எங்கே அமைந்துள்ளது?
விடை : நைனிடால்
20. உத்திரகாண்டில் மிக குறைந்த நிலப்பகுதி எது ?
விடை : சாராத சாகர் நீர்த்தேக்கம்
21. உத்திரகாண்டில் எத்தனை வனவிலங்கு சரணாலயம் உள்ளன ?
விடை : ஏழு
22. உத்திரகாண்டில் உள்ள மிக பெரிய பனிமழை எது ?
விடை : கங்கோத்திரி பனிமழை
23. உத்திரகாண்டில் பொருளாதாரத்தில் மிக முக்கியமான மிக முக்கியமான துறை எது ?
விடை : விவசாயம்
24. உத்திரகாண்டின் முக்கியமான பணப்பயிர் எது ?
விடை : கரும்பு
25. உத்திரகாண்ட் மாநிலத்தின் மாநில பறவை எது ?
விடை : இமயமலை மோனஸ்
இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்.! | Sri Lanka GK Questions in Tamil
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














