வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாழ்விக்கும் கல்வி வினா விடை | Vaalviyal Kalvi Gk Question Answer In Tamil

Updated On: November 19, 2025 1:16 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

வாழ்விக்கும் கல்வி வினா விடை 

இன்றைய பதிவில் வாழ்விக்கும் கல்வி வினா விடை பற்றி பார்க்க போகிறோம். போட்டித் தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். கடைசி நேரத்தில் அவை நம் நினைவுக்கு வந்து தேவையில்லாத மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது எப்படி? குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப படிக்கும் போது எளிதாக மனதில் பதிந்துவிடும். அந்த வகையில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களின் வசதிக்காக பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வு வந்தால் மட்டும் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள். பரீட்சையின் போது மட்டும் படித்தால் தேர்வின் போது மட்டுமே உங்களுக்கு விடைகள் நியாபகம் இருக்கும், அதற்கு பின் நினைவில் இருக்காது. எப்போதுமே பொது அறிவு சார்ந்த கேள்விகளை அவசரமான சூழ்நிலையில் படிக்காமல் நிதானமாக படித்தால், நீங்கள் எந்த தேர்விற்க்கும் பயமில்லாமல் செல்லலாம். அந்த வகையில்  இன்றைய பதிவில் வாழ்விக்கும் கல்வி வினா விடை பற்றி பார்க்கலாம் வாங்க…. 

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:

1. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் _________

விடை : காலம் அறிதல் 

2. கல்வியில்லாத நாடு ________வீடு

விடை :  விளக்கில்லாத 

3. பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாடியவர்________ 

விடை : பாரதியார் 

4. உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______ 

விடை : உயர்வு +அடைவோம் 

5. இவை +எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது_______ 

விடை : இவையெல்லாம் 

சொற்றொடரில் அமைத்து எழுதுக 

1.செல்வம் –கல்விச்செல்வம் என்றும் அழியாது 

2. இளமைப்பருவம் –இளமைப்பருவம் கல்விக்கு உரிய பருவம் 

3. தேர்ந்தெடுத்து –நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

குறு வினா : 

1. மனிதப் பிறவிக்கும் பிற உயிரனங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?

விடை : எதிர்காலத்தில் பிற உயிரினங்கள் என்னவாகும் என்பதைச்சொல்ல முடியும். ஆனால் மனித பிறவியின் எதிர் காலத்தை கூறவே முடியாது. இதுவே மனித பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

2. கல்வியறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளூர் கூறுவது ?

விடை : கல்வியறிவு இல்லாதவர்கள் விலங்குகள் என்று வள்ளுவர் கூறுகிறார். 

3. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?

விடை : படிக்க வேண்டிய நூல்களை நன்கு ஆழ்ந்து, ஆராய்ந்து தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 

பொது அறிவு வினா விடை 2025 | GK Question 2025 in Tamil

சிறுவினா :

1. கல்வியே அழியாத செல்வம் விளக்குக?

விடை :

  • உலகில் எல்லாச் செல்வங்களும் அழிந்துவிடும். 
  • இருப்பது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் இங்கு இருந்த ஆலமரம் எங்கே என்றால் புயலில் விழுந்துவிட்டது என்போம்.
  • இங்கிருந்த பெரிய கட்டடம் எங்கே என்றால் , மழையால் இடிந்துவிட்டது என்பர் 
  • 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 இலட்சம் வைத்திருந்தவர். இன்று இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்பார்.

2. கல்வியையும், விளக்கையும் திருக்குறளால் எவ்வாறு ஒப்பிடுகிறார்?

விடை : கல்வி ஓர் ஒளிவிளக்கு இருக்கும் இடத்தை ஒளிமயமாகும் ஆக்கும். அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால் அப்படி பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி. கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு ஆகும். விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள்? வீடு இருட்டாக இருக்கும். அதுப்போல கல்வி இல்லாத குடும்பத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now