விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? | Vimaanathai Kandupidithavar Yaar

Vimaanathai Kandupidithavar Yaar

விமானம் கண்டுபிடித்தவர் யார்? 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் விமானத்தை கண்டுபிடித்தவர் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சம்மந்தமான கேள்விகள் உலகில் பல உள்ளன. அறிவியலில் பல பிரிவுகள், கணிதத்தில் பல பிரிவுகள், வரலாற்றில் பல பிரிவுகள் இது மாதிரி பல பொது அறிவு பிரிவுகள் இருக்கிறது. நாம் இந்த பதிவில் அறிவியல் சார்ந்த பிரிவில் விமானத்தை கண்டுபிடித்தவர் யாரென்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

விமானத்தை கண்டுபிடித்தவர் யார்?

விடை: வானில் பறக்கக்கூடிய விமானத்தை ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோதரர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

விமானம் எப்படி உருவானது தெரியுமா:

வானில் பறந்து கொண்டிருந்த பறவையை வைத்து தான் மனிதன் விமானத்தை படைத்தான். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நண்பர்களே பறவை வானில் பறக்கும் போது இவ்வளவு அழகாய் இருக்கிறதே, நாமும் இது மாதிரி வானில் பறந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும் என்று நினைத்து பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து விமானத்தை உருவாக்கியவர்கள் தான் இந்த ரைட் சகோதரர்கள்.

விமானம் கண்டுபிடிப்பு வரலாறு:

உலகில் எந்த இடத்திற்கும் நினைத்தவுடன் சென்று வர முக்கிய காரணமாக இருப்பது ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய ஒவ்வொரு துளி வேர்வையும் தான் என்றே சொல்லலாம்.

1903-ஆம் ஆண்டு தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புறபடுத்துக் கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயர் சூட்டப்பட்ட அந்த விமானம். யார் அந்த விமானத்தை இயக்குவது என்ற குழப்பத்தில் நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வாய்ப்பு கிடைத்தது.

விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. அப்போதே ரைட் சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர்.

ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்?

விடாமுயற்சி:

டிசம்பர் 17-ந் தேதி மீண்டும் முயற்சி செய்தார்கள். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. விமானத்தில் குப்புறபடுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில். அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே போக தொடங்கியது.

அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது. வெற்றி சந்தோஷத்தில்  ரைட் சகோதரர்கள் மிதந்தார்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது.

பல சாதனைகள்:

அன்றைய தினமே மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி வானில் பறந்து சோதனைகள் செய்து வந்தார்கள். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம் வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர்.

தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில். ரைட் சகோதரர்கள் முதன் முதலில் பயணம் செய்து வந்த அந்த விமானத்தை வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ரைட் சகோதரர்களின் இறப்பு:

கண்ட கனவை விடாமுயற்சியுடன் மேற்கொண்டதால் தான் இன்று நாம் எந்த மூளைக்கும் சென்று வர விமான சேவை கிடைத்துள்ளது. இவர்களை பார்த்து உலகமே முட்டாள்கள் வானில் பறக்க போகிறார்களாம் என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள். எந்த கஷ்டத்திலும் தளர்வு இல்லாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தால் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக சாதனையாளன் தான்.

தொலைக்காட்சி கண்டுபிடித்தவர் யார்?

 

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த ரைட் சகோதரர்களாகிய வில்பர் ரைட் என்பவர் 1912-ஆம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதியும், ஆர்வில் ரைட் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதியும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil