மனிதனை போல் கைரேகை கொண்டுள்ள விலங்கு எது தெரியுமா..?

What Animal has Fingerprints Similar to Humans in Tamil

What Animal has Fingerprints Similar to Humans in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே நமது பொது அறிவு பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் மனிதனை போல் கைரேகை கொண்டுள்ள விலங்கு எது என்பதை பற்றியும் அதனை பற்றியும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

What Animal have Fingerprints Similar to Humans in Tamil:

What Animal have Fingerprints Similar to Humans in Tamil

ஒரு குற்றத்தை செய்து அந்த குற்றத்தை புரியும் பொழுது  கைரேகையை அங்கு பதிந்திருந்தால் குற்றவாளியை எளிமையாக கண்டுபிடித்துவிட முடியும்.

இதற்கு காரணம் பொதுவாக மனிதர்களின் கைரேகைகள் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கு வித்தியாசமாகவே உள்ளது.  ஆனால் மனிதனை போன்று விலங்குகளுக்கும் அவற்றின் உடலமைப்பை பொறுத்து கைரேகை உள்ளதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

ஆனால் மனிதர்களின் கைரேகை போன்றே கைரேகையை கொண்டுள்ள ஒரு விலங்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது தான் உண்மை.

 ஆம் நண்பர்களே மனிதர்களை போன்றே  கைரேகை கொண்டுள்ள விலங்கு எதுவென்றால் கோலா கரடி தான்.  

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Fingerprint எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா

ஆம் நண்பர்களே ஆஸ்திரேலியாவை சேர்ந்த கரடியினமான கோலா கரடிக்கு தான் மனிதர்களை போன்ற கைரேகை உள்ளது என்று 1996-ல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு கூறுகின்றது.

பொதுவாக நுண்ணோக்கியில் பார்க்கும்போது கூட, கோலா கைரேகைகள் மனித கைரேகைகளைப் போலவே இருக்கும். ஆனால் கோலா கரடியின் கைரேகைகள் மனித அச்சுகளை விட சிறிதளவு அகலமான பரப்பளவைக் கொண்டுள்ளன.

கோலாக்கள் ஒரு பாலூட்டி இனத்தை சேர்ந்தவை. இவை யூகலிப்டஸ் இலைகளையே தனது முக்கிய உணவாக எடுத்து கொள்கின்றன. இவை மரங்களில் ஏறும் தன்மையை கொண்டுள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> எலும்பு இல்லாத உயிரினம் எது தெரியுமா

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil