ஆயிரம் ஏரிகளின் நிலம்
நாம் பிறந்த ஊர் மட்டும் இல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் குளம், ஏரி மற்றும் வாய்க்கால் போன்றவற்றை இருப்பது இயற்கையான ஒரு விஷயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதற்கு மாறாகவும் மற்றும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆயிரம் ஏரிகள் நிறைந்த நாடு ஒன்று உள்ளது. இது நமக்கு கேட்பதற்கு கொஞ்சம் புதியதாக தான் இருக்கும். ஏனென்றால் நாம் ஒரு ஊரில் 1 அல்லது 2 ஏரிகளை மட்டுமே பார்த்து இருப்போம். அதுவும் மிகவும் அரிதான ஒன்று என்று தான் கூற வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு ஒன்று உள்ளது. அது என்ன நாடு மற்றும் அந்த நாட்டின் பிற தகவல்கள் பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.
ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுவது எது..?
இன்றைய காலத்தை பொறுத்தவரை குளம், வாய்க்கால் மற்றும் ஏரி போன்றவற்றை பார்ப்பதே மிகவும் கஷ்டம் என்று தான் கூற வேண்டும்.
அதுபோல இனிவரும் காலங்களில் உள்ள பிள்ளைகளுக்கு இவற்றை பற்றி தெரியுமா என்று கேட்டால் அதுவும் கொஞ்சம் சிரமம் தான். அதுமட்டும் இல்லாமல் தண்ணீர் தட்டுப்படும் இப்போது நமக்கு நடந்துகொண்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் நாம் இருக்கும் போது ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று ஒரு நாடு அழைக்கப்டுகிறது. அது என்ன நாடு என்றால்..?
அது பின்லாந்து தான். பின்லாந்தில் மட்டும் தோராயமாக 1,68,000 ஏரிகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பின்லாந்தில் 1,79,000 தீவுகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது..? |
பின்லாந்து இதில் மட்டும் சிறப்பு வாய்ந்த நாடக இல்லாமல் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் நாடாகவும் விளங்குகிறது.
இந்த நாட்டின் மகிழ்ச்சிக்கு காரணம் பொருளாதாரம், ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் ஆகிய அனைத்தும் தான் என்று பெருமையாக கூறப்படுகிறது.
பின்லாந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வரை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இருக்கிறது.
இத்தகைய நாட்டின் கல்வி முறை என்பது வேறு நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் மனிதர்களை மிகவும் வியக்க வைக்கிறது. ஏனென்றால் இந்த நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் 7 வயதில் இருந்து தான் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |