இதயம் இல்லாத உயிரினம் எது.?
இந்த உலகில் வாழும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் என்ற அனைத்திற்குமே இதயம் உள்ளது அதனால் தான் அவைகள் உயிரி வாழ்கிறது என்று நினைத்து கொண்டிருக்கோம். உயிரினங்களுக்கு ஒரு இதயம் உள்ளது அதுவும் சிறிய இதயமாக இருக்கும் என்று நினைக்கிறோம். அது முற்றிலும் தவறு. உலகில் வாழும் விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இதயங்கள் உள்ளது. சில உயிரினங்களுக்கு இதயமே இல்லையா.! நம்ப முடியல தான.! உண்மை தாங்க இதயம் இல்லாத உயிரினம் உள்ளது. அவை என்ன உயிரினம் என்று யோசித்து கொண்டே முழு பதிவையும் படித்து பதிலை தெரிந்து கொள்ளவும்.
இதயம் இல்லாத உயிரினம் எது.?
இதயம் இல்லாத உயிரினம் மண்புழு. மண்புழுவின் ஒவ்வொரு உடல் கட்டுக்கு கிளைவிடும் கிளைக்குழாய்களும், உடல் முழுவதும் பாயும் நீளமான நாளங்களும் உள்ளதே தவிர, தனி உறுப்பாக இதயம் என்ற ஒன்று இல்லை.
மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா..?
மண்புழு பற்றிய தகவல்:
இவை விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கபடுகிறது.
மண்புழு 8 அடி முதல் 21 cm நீளம் இருக்கும். 3 முதல் 4 மில்லி மீட்டர் அகலமாக இருக்கும். மண் புழுவிற்கு கைகள், கால்கள் அல்லது கண்கள் இல்லை. உலகில் சுமார் 6000 வகையான மண்புழுக்கள் உள்ளது. மண்புழு 12 அடி நீளம் வரை வளரும் திறன் கொண்டவை. தோராயமாக 450 கிராம் எடையை கொண்டிருக்கும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் 10 லட்சம் மண்புழுக்கள் இருக்குமாம். உணவு, ஆக்சிஜன், ஈரப்பதம், வெப்பநிலையை பொறுத்து மண்புழுக்கள் உயிரி வாழ்கின்றன.
மண்புழுக்கு கண் இல்லை, ஆனால் இவை முன்பகுதியில் இருக்கும் ஒளியை வைத்து உணர்ந்து வெளிச்ச பகுதியிலுருந்து இருட்டை தேடி கொள்ளும். ஒரு மணி நேரத்திற்கு மேல் மண்புழு வெளிச்சத்தில் இருந்தால் இறந்து விடும்.
மண்புழுக்கள் 6 அடி ஆழம்வரை மண்ணை தோண்டும். அதாவது மண்புழுக்களுக்கு உயிர் வாழ்வதற்கு ஏற்ற ஈரப்பதம் கிடைக்கும் வரை மண்ணை தோண்டும்.
மண்புழுவின் சராசரி ஆயுட்காலம் நான்கு முதல் எட்டு ஆண்டுகள் வரை இருக்கலாம். தோட்ட வகை மண்புழுக்கள் சுமார் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |