காகம் இல்லாத நாடு
இன்றைய பதிவில் காகம் இல்லாத நாடுகள் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் வாழும் இடத்தில் கட்டாயம் காகம் இருக்கும். நாம் காகத்தை சிறு வயதில் இருந்தே பார்த்திருப்போம். சிறிய குழந்தைகளுக்கு காகத்தை காட்டி தான் சாப்பாடு ஊட்டுவார்கள். நாம் இந்த இந்திய நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் காகத்தை காண முடியும். ஆனால், காகமே இல்லாமல் ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் காகம் இல்லாத நாடு எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா..? |
What Is A Country Without A Crow in Tamil:
காகம் அல்லது காக்கை என்று அழைக்கப்படும் இது கார்விடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். பொதுவாக காகம் கருப்பு நிறம் கொண்ட பறவை ஆகும். காகங்களில் 40 வகையான இனங்கள் உள்ளன.
இந்த காகமானது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. இது சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது என்று கூறுகிறார்கள். காகம் மத்திய ஆசியாவில் தான் தோன்றியது என்று கூறப்படுகிறது.
காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் என்று சொல்லலாம். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு மற்றும் இறந்த உயிரினங்கள் போன்றவற்றை உண்ணக்கூடியது. காகம் வயல்களில் உள்ள பூச்சிகளை உணவாகக் கொள்வதால் இது உழவர்களின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது.
காகங்கள் மற்ற பறவை விட கூடுதல் அறிவுத் திறன் பெற்றது என்று கூறப்படுகிறது. காகத்தின் மூளைப்பகுதியில் அமைந்துள்ள “நிடோபோடாலியம்” என்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நிடோபோடாலியம் என்பது பறவைகளின் அறிவுத்திறனுக்கு காரணமாக உள்ள மூளையின் செயல்பாட்டுப் பகுதி என்று சொல்லலாம்.
காகங்கள் நம் நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் நியூசிலாந்தில் மட்டும் இன்று வரை காகங்கள் கிடையாது என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நியூஸ்லாந்து நாட்டில் மட்டும் ஏன் காகம் இல்லை என்பதற்கான காரணம் இன்று வரை சரியாக அறியப்படவில்லை.அதிக நேரம் தூங்கும் மக்கள் வசிக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |