உலகில் பாம்புகளே இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா..?

What is a country without snakes in tamil

What is a country without snakes in tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பாம்பு பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அது உண்மை தான் பாம்பை பார்த்தால் அனைவரின் மனதிலும் ஒரு பயம் எழும். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். சரி பாம்பு இல்லாத இடமே கிடையாது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பாம்புகளே இல்லாமல் ஒரு நாடே இருக்கிறது. அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

வீட்டிற்குள் பாம்பு வராமல் இருக்க இதை செய்துடுங்கள்.!

பாம்புகளே இல்லாத நாடு எது..? 

What is a country without snakes

நம் வாழும் இந்த பூமியில் எத்தனையோ உயிரினங்கள் காணப்படுகின்றன. அதில் பாம்புகளும் ஓன்று. பாம்புகள் விஷத்தன்மை கொண்டது. அதனால் தான் பாம்பை கண்டால் அனைவரும் பயப்படுகிறார்கள்.

இந்த உலகில் கோடிக்கணக்கான பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவை என்று சொல்ல முடியாது. இந்த உலகில் 3600 க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் 600 பாம்புகள் இனங்கள் மட்டுமே நச்சு தன்மையை கொண்டுள்ளது.

பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சில பாம்புகள் நீரில் வேகமாக நீந்தும் தன்மையை கொண்டுள்ளது.  நம் இந்திய நாட்டில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 50 பாம்பு இனங்கள் மட்டுமே நச்சு தன்மை கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பாம்புகளின் தாயகம் இந்தியா என்று சொல்லப்படுகிறது.  

பாம்பு கடித்தால் முதலுதவி என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?

 

பாம்புகளே இல்லாமல் ஒரு நாடே இருக்கிறது என்றால் நமக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் இது உண்மை தான். அயர்லாந்து நாட்டில் இன்று வரை பாம்புகளே கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அங்கு பாம்பு இல்லாததற்கு ஒரு  காரணம் காரணமும் இருக்கிறது.

அந்த நாட்டில் முந்தைய கால கட்டத்தில் பாம்புகள் அதிகளவில் தான் இருந்திருக்கின்றன. ஆனால் நாளடைவில் அயர்லாந்து நாட்டில் இருந்த குளிர் காரணமாக பாம்புகள் அழிந்து விட்டன என்று கூறுகிறார்கள்.

 அந்த நாட்டில் இருக்கும் குளிர் காரணமாகத் தான் இன்று வரை பாம்புகள் அங்கு வாழ்வது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அயர்லாந்து நாட்டில் குளிர் அதிகமாக காணப்படுவதால் அங்கு பல்லிகள், பாம்புகள், பூரான் போன்ற ஊர்வன உயிரினங்கள் வாழ்வது இல்லை.  

இது தான் அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதேபோல குளிர் பிரதேசமான நியூசிலாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அன்டார்க்டிக்கா போன்ற நாடுகளிலும் பாம்புகள் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

அதிக நேரம் தூங்கும் மக்கள் வசிக்கும் நாடுகள் எது உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil