காய்கறி தங்கம் எனப்படும் மலர் எது? | What is Known as Vegetable Gold
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பொது அறிவு வினா விடையை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். தினமும் ஒரு பொது அறிவு சார்ந்த விஷயங்களை படித்தோம் என்றால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் பொது அறிவு வினாக்களும் கைகொடுக்கும். ஆக தினமும் ஒரு பொது அறிவு வினா விடையை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இன்றைய பொது அறிவு வினா மற்றும் அதற்கான விடை என்ன என்று பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட காய்கறி வகையை `தாவரத் தங்கம்’ என்று அழைக்கின்றோம். அது எது தெரியுமா? தெரியாது என்றால் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
காய்கறி தங்கம் எனப்படும் மலர் எது?
விடை: குங்குமப்பூ
உலகப்புகழ் பெற்ற பொருள்களுள் குங்குமப்பூவும் ஒன்று. குங்குமபூவுடைய மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். ஒரு லோ குங்குமப்பூ தயாரிக்க சுமார் இரண்டு இலட்சம் மலர்கள் வரை தேவைப்படுகிறது. அதனால் இதன் விலையும் மிக அதிகம். இதன் காரணமாக தான் காய்கறிகளின் தங்கமாக குங்குமப்பூ விளங்குகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் இதயம் உள்ள உயிரினம் எது உங்களுக்கு தெரியுமா..?
குங்குமப்பூ நன்மைகள்:
கர்ப்பமாக உள்ள பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை சேர்த்துகொள்ளலாம். குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது.
குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.
குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துகிறது.
குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
கண் பார்வை திறனை அதிகரிக்க குங்குமப்பூ சாப்பிடலம். குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு, விழித்திரையை சீரமைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதயமே இல்லாத உயிரினம் உள்ளதா.! அப்போ எப்படி உயிர் வாழும்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |