வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மஞ்சள் நிற நதி எந்த நாட்டில் ஓடுகிறது தெரியுமா?

Updated On: September 12, 2025 3:59 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

 

மஞ்சள் நிற நதி எங்குள்ளது 

சீனாவின் அகலமான நதி எது: இன்றைய பதிவில் பொது அறிவு சார்ந்த பகுதியில் சீனாவில் இருக்கும் மஞ்சள் ஆறு பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த இந்த பதிவு பயன்படக்கூடிய பதிவுவாகும். மேலும்,சீனாவின் மஞ்சள் ஆறு முக்கியமான நதியாகும். வடசீன நாகரிகம் இந்த ஆற்றின் படுக்கையில் தோன்றியதால், இது சீன நாகரிகத்தின் என அழைக்கப்படுகிறது. சீன அரசு  இந்த ஆற்றின் சுற்றுசூழல் வளத்தை பாதுகாக்க பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது சீனாவில் இருக்கும் மஞ்சள் ஆறு பற்றி பார்க்கலாம் வாங்க.

மஞ்சள் நிற நதி எந்த நாட்டில் ஓடுகிறது?

விடை: சீனா 

மஞ்சள் நதியின் அகலம் எவ்வளவு:

சீன  நாட்டில் இருக்கும் மஞ்சள்  நதியானது 5464 கிலோமீட்டர் அகலத்தினை கொண்டது.

மஞ்சள் நதியின் வடிகால் பகுதி:

 சீனாவில் இருக்கும் மஞ்சள் நதி உலகின் 6 வது  மிகப்பெரிய வடிகால் பகுதி என்பது மிகவும் சிறப்பிற்குரியது.  இந்த நதி மேற்கு சீனாவின்  கிங்ஹாய் மாகாணத்தில் உள்ள பாயன் ஹெர் மலைத்தொடரில் தொடங்கி 9 மாகாணங்கள் வழியாக சென்று பொகாய் கடலில் கலக்கிறது.

உலகின் அகலமான நதி எது?

மஞ்சள் நதியின் சிறப்பு:

  • இந்த மஞ்சள் ஆற்றிற்கு ஹுவாங் ஹீ  என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது சீனாவில் இரண்டாவது மிக பெரிய நதியாகும். மஞ்சள் நதி சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு வட வடசீன நாகரிகம் தோன்றியதாக கருதப்படுகிறது.
  • மஞ்சள் ஆறு  வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தின் தெற்கே இருக்கும் கிங்காய் மாகாணத்தில் உள்ள குன்லுன் மலைகளில் உருவாகிறது.
  • இந்த நதி ஒரு காலத்தில் சீனாவின் விவசாய பகுதிகளுக்கு  நல்ல செழிப்பைம், வளமையும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் காரணமாக இதற்கு சீனாவின் துயரம் என பெயர் பெற்றுள்ளது.
  • சீனாவின் மஞ்சள் நதி படுக்கையில் தோன்றியாக கருதப்படுகிறது. சீனர்கள் இதனை தாய் ஆறு என்றும் கூறுகிறார்கள்.
  • இந்த மஞ்சள் நதி அது செல்லும் வழியில் பாறைகளின் இருக்கும் படிமங்களை கொண்டு வருவதால் இது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.
  • மஞ்சள் நதியின் மைல்கள் 3,395, 5464 கிலோமீட்டர்,சதுர மைல்கல்  2,90,000,சதுர கிலோமீட்டர் 7,50,000 
  • இந்த நதி சீனாவின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • சீன அரசு மஞ்சள் நதியை பாதுகாக்க மஞ்சள் நதி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • சீனாவில் மஞ்சள் ஆறு மற்றும் யாங்சே ஆற்றையும் சீன தலைவர்  “தாய் ஆறு” என்று கருதி அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். 
  • சீனாவில் இருக்கும் ஹுவாங் ஹீ என்ற நதி நீர் லோஸ் பீடபூமியிலிருந்து அதிக அளவு மஞ்சள் மற்றும் மெல்லிய லோஸ் வண்டலை கொண்டுசெல்கிறது. இதனால் இந்த நதி அதன் தனித்துவமான நிறத்தை அளிக்கிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil



 

 

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now