What Sea Creature Have Three Hearts in Tamil | மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம்
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் போட்டி தேர்வு வைக்கப்படுகிறது. அப்படி வைக்கபடும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பொதுஅறிவு தகவலை தொடர்ந்து அறிந்து கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் எது அதனை பற்றிய தகவலையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா
மூன்று இதயம் உள்ள உயிரினம் எது.?
About Three Heart Animal in Tamil:
- பொதுவாக ஆக்டோபஸில் 300 வகையான இனங்கள் உள்ளன.
- ஆக்டோபஸ் உடம்பில் எலும்பு இல்லாத காரணத்தால் எளிதில் அணைத்து இடத்திலும் நழுவி செல்லும் தன்மை கொண்டது.
- இதன் இரத்தம் நீல் நிறத்தில் இருக்கும். இதன் இரத்தத்தில் Hemocyanin என்னும் புரதம் உள்ளது. இதனால் ஆக்சிசன் ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகிறது. மற்றபடி, ஆக்சிசன் ஏற்காத நேரத்தில் நிறமில்லாமல் இருக்கும்.
- அவை அனைத்திற்குமே மூன்று இதயங்கள் உள்ளன.
- ஒரு இதயம் அவற்றின் இரத்த ஓட்ட அமைப்பு முழுவதும் கட்டுப்படுத்த உதவுகிறது.
- மற்ற இரண்டு இதயங்களும் அதனின் செவுள்கள் வழியாக இரத்தத்தை பாயசெய்ய உதவுகிறது.
- நீங்கள் ஆக்டோபஸ்களை எந்த கடலிலும், எந்த ஆழத்திலும் காணலாம்.
- மேலும் அவை தங்களின் நிறம் மற்றும் வடிவத்தை மாற்றும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளன.
- மேலும் இவற்றின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும்.
- இவற்றுக்கு ஒன்பது மூளைகள் உண்டு.
- அதில் ஒரு மைய மூளை நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது.
- மற்ற எட்டு மூளைகளும் அவற்றின் எட்டு கைகளிலும் உள்ளது.
- மேலும் இதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது.
- இதற்கு காரணம் இதன் இரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் என்ற செப்பு நிறைந்த புரதம் தான்.
- பேய்க்கணவாய், உருமாறி கொண்டே இருக்கும். உணவுகளை வேட்டையாடவும், எதிர் உயிரினங்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் பேய்க்கணவாய், உருமாறி கொண்டே இருக்கும். அதற்கு உதவும் வகையில் அதன் உடலில் தனித்துவமான தோல் உயிரணுக்கள் அமைத்துள்ளது. பல்வேறு நிறங்களைக் கொண்ட நிறமிகளின் மூலம் நிறம் மாறுகின்றன.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |