உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது | When Was World Environment Day Celebrated for the First Time
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் எந்த ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த உலக சுற்றுச்சூழல் தினம் எதற்காக கொண்டப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மட்டுமே தான் உலக நாடுகள் அனைத்தும் இணைத்து கொண்டாடி வருகிறது. சரி வாங்க இந்த உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் எந்த ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது..!
விடை: 1972-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படியுங்கள் 👉👉👉 உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை
சுற்றுச்சூழல் தினம் நோக்கம்:
நிலக்கோளம், நீர்க்கோளம், வாயுக் கோளம் இவை முன்னரும் ஒருங்கிணைந்த ஒன்றான உயிர்கோளமே நமது புவிக்கோளம். அணைத்து உயிரினங்களும் வாழக்கூடிய அமைப்பில் இயற்கையாவே உருவான அற்புத கோளம்தான் நமது புவிக்கோளம். புவியின் இயக்கம் நிலையாக இருக்க அதன் அங்கமான காடுகள், மலைகள், நதிகள், கடல்கள், பறவைகள், விலங்குகள் இவை அனைத்தும் இயல்பாக இருந்தால் தான் நமது புவியும் இயலப்பாக இருக்கும்.
புவியின் அங்கமான இவை ஏதேனும் ஒன்றுக்கு பாதிப்பு என்றால் புவியின் இயக்கமும் இயல்பாக இல்லாமல் போய்விடும். புவியின் அங்கமான இவற்றிக்கு பங்கம் விளைவிக்க வரிசைகட்டி நிற்கிறோம் மனிதர்களாகிய நாம். இதன் காரணமாக புவியின் இயக்கம் மாபெரும் சுணுக்கம் ஏற்பட்டுள்ளது.
மனிதனாகிய நாம் இந்த பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணியத்தின் விளைவு தான் பருவ நிலை மாற்றம், புவி வெப்பநிலை மாற்றம், கடல் நீர்மட்டம் உயர்வு, வறட்சி, வெள்ளம், காற்று மாசுபடுதல் போன்ற சுற்றுசூழலுக்கு பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிர்றோம்.
இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் மனிதர்களாகிய நாம் தான். ஆகவே இவையெல்லாம் சற்று சிந்தித்து பார்த்து சரி செய்துகொள்ள முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நாம் ஜூன் 5 அன்று மட்டும் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடாமல் தினம் தினம் நாம் மனதில் நினைத்து செயல்பட்டோம் என்றால் நம் வருங்கால சந்ததியினர் திண்டாடாமல் இருப்பார்கள்.
இயற்கையிடமிருந்தே நாம் உணவை பெறுகிறோம், இயற்கையிடமிருந்தே நீரை பெறுகிறோம் நாம், இயற்கையிடமிருந்தே காற்றை பெறுகிறோம் நாம்.. இத்தனையும் தருகின்ற இயற்கைக்கு என்ன தருகிறோம் நாம். தீராத வலிகளையும், வேதனைகளையும் தானே தருகிறோம்.
ஆகவே இனியாவது சுற்றுச்சூழலை பாதுகாப்போம். இயற்கையை பாதுகாக்க எடுத்துரைக்கும் ஒவ்வொரு வழிமுறைகளும், அவர்களது எதிர்கால வாழ்விற்கு நல்லொளியாய் அமையும். இயற்கையை நம்மால் முடித்தவரி பாதுகாப்பாக பேணிக்காப்போம். மேலும் இயற்கையை பாதுக்காக்க அனைத்து முயற்சிகளையும் மனிதர்களாகிய நாம் மேற்கொள்வோம். இயற்கையை பாதுகாப்பதே இந்த சுற்றுச்சூழலின் நோக்கமாகும்.
இதையும் படியுங்கள் 👉👉👉 சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை
மேலும் இது போன்று கட்டுரை பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Katturai in Tamil |