Which Animal Gives Both Egg And Milk in Tamil
வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் Gk வினா விடைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று முட்டை மற்றும் பால் இரண்டையும் தரக்கூடிய விலங்கு ஒன்று உள்ளது.? அதை பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாக விலங்குகள் என்றாலே பால் கொடுக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டையும் போட்டு பாலும் கொடுக்கும் விலங்கு இருக்கிறது என்று தெரியுமா..? இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களின் ஒவ்வொரு விஷயமும் நமக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. நாம் இதுவரை கேள்வி படாத பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முட்டை மற்றும் பால் இரண்டையும் தரக்கூடிய விலங்கினை பற்றி இப்பதில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் ⇒ மனிதனை போல் கைரேகை கொண்டுள்ள விலங்கு எது தெரியுமா..?
முட்டை மற்றும் பால் இரண்டையும் தரும் விலங்கு எது..?
பால் மட்டும் முட்டை இரண்டையும் தருகின்ற உயிரினம் ஒன்று உள்ளது. அதுதான் பிளாட்டிபஸ் எனப்படும் உயிரினம். இது ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இது முட்டையும் இட்டு குஞ்சும் பொரித்து பால் கொடுக்கும் ஒரு அரியவகை உயிரினமாகும்.வடிவமைப்பு:
இது வாத்தை போன்ற வடிவமைப்பு உடையது. இதன் கால்விரல்கள் சவ்வினால் இணைத்திருக்கும். மேலும் தட்டையான வாலும், உடல் ரோமத்தாலும் சூழ்ந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல் இது பாம்பினை போன்று விஷத்தன்மையும் கொண்டிருக்கும்.
வாழும் இடம்:
இந்த பிளாட்டிபஸ் உயிரினம் நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது. இது எலிகளை போலவே நிலத்தில் வலை பறித்து வாழும். மீன்களை போல நீருக்கும் மூழ்கி உணவும் தேடும்.
இது பறவைகளை போன்று முட்டையிட்டு பாலூட்டும் பாலூட்டி வகையை சார்ந்த உயிரினமாகும். இதனை வாத்தலாகி என்றும் அழைப்பார்கள்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் ⇒ தண்ணீர் இல்லாமல் விலங்குகள் எவ்வளவு காலம் வாழ முடியும் தெரியுமா.?
பிளாட்டிபஸ்ஸின் ஆயுட்காலம்:
பிளாட்டிபஸ்ஸின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
பிளாட்டிபஸ் எப்போது தோன்றியது..?
பிளாட்டிபஸ் உயிரினம் 1798- ஆம் ஆண்டில் உலகத்திற்கு தெரியவந்தது. ஆஸ்திரேலியாவில் இதன் உடல் ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |