முட்டையிடும் விலங்குகள் எது..?

Names of Animals That Lay Eggs in Tamil

Names of Animals That Lay Eggs in Tamil

விலங்குகள் அதிகமாக காடுகளில் தான் வாழுகின்றன..! அதில் ஒரு சில விலங்குகளை மட்டுமே நாம் இங்கு பார்ப்போம்..! நமக்கு தெரிந்த எல்லா பறவைகளும் முட்டை இடும். அதேபோல் விலங்குகளில் அனைத்துமே குட்டி போடும் என்று நமக்கு தெரியும்.

விலங்குகள் என்றால் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கும். அதிகளவு காடுகளில் தான் வாழுகின்றது என்பது தான் நமக்கு தெரியும்..! ஆனால் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அதில் முக்கியமாக தெரிந்து கொள்வது முட்டை இடும் விலங்கு எது என்பது தான். ஆகவே முட்டையிடும் விலங்கு எது என்பது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

முட்டையிடும் விலங்குகள் எது..?

விடை: எகிட்னா

இதனை பார்ப்பதற்கு முள்ளம்பன்றி போலவே இருக்கும். இதன் பெயர்  எகிட்னா  ஆகும். இது ஓர் அதிசய உயிரினம். இந்த உயிரினம் பறவைகளை போலவே முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும். விலங்குகளை போல பால் கொடுக்கும் உடல் தன்மை கொண்டது இது.

முட்டையிடும் விலங்கு:

இந்த எகிட்னாவின் சிறப்பு என்னவென்றால் இது முட்டையிட்டு பாலும் கொடுக்கும். இது ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். பாலூட்டி என்றால் அது முட்டையிட்டு குஞ்சி பொரிக்கும். ஆனால் இந்த எகிட்னா முட்டையிட்டு பால் கொடுக்கும் அதனால் தான் இது அதிசய விலங்கு.

இது ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியா என்ற இடத்தில் அடர்ந்த காடுகளில் தான் வாழ்ந்து வருகிறது.

இதற்கு உணவு கரையான், எறும்பு இதனை மட்டும் தான் இது சாப்பிட்டு வாழுகின்றது. இதற்கு இன்னொரு பெயர் உள்ளது. எறும்புத்தின்னி என்ற பெயரும் இதற்கு உண்டு.

இதனுடைய உடல் நீளம் 35 சென்டிமீட்டர் ஆகும்.  இதனுடைய வால் சிறியதாகவும், கால்கள் வலிமையாகவும் இருக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள் => நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

எகிட்னாவின் முடி தான் உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது. ஏனென்றால் இதனுடைய முடி கூர்மையாக இருக்கும்.

இது காடுகளில் செங்குத்தாக குழி தோண்டி அதன் உள் பகுதியில் தான் வாழ்கின்றது.

இதன் இனப்பெருக்கம் வருடத்திற்கு ஒரு முறை தான். இதனுடைய கர்ப்பகாலம் 27 நாட்கள் தான். இது 1 முட்டை அல்லது 2 முட்டை போடும்.

அதனுடைய வயிற்று பகுதியில் தான் அடை காக்கும். 15 நாட்களுக்கு பிறகு முட்டை பொறித்துவிடும்.

55 நாட்கள் வயிற்று பகுதியில் தான் இருக்கும். அதனுடைய வயிற்று பகுதியில் வேர்வை போல் சுரக்கும் அதனை தான் பால் போல் குடிக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  எலும்பு இல்லாத உயிரினம் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil