Which Animal Sleeps The Longest
இந்த உலகில் வாழும் உயிர்களில் அனைவருக்கும் பொதுவாக இருப்பது தூக்கம் தான். இது மனிதர்களாக இருந்தாலும் சரி மற்ற உயிரினங்களாக இருந்தாலும் சரி அனைவருக்குமே தூக்கம் வருவது இயல்பு தான். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தூங்குவார்கள். ஆனால் விலங்குகள் அப்படி இல்லை. விலங்குகள் எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கலாம். அவர்களுக்கு காலம் நேரம் கிடையாது. ஆனால் சில விலங்குகள் குறிப்பிட்ட நேரம் வரை தூங்கும். அதுபோல சில உயிரினங்கள் அதிக நேரம் வரை தூங்கும். அப்படி அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஆசியாவிலே மிகவும் தூய்மையான நதி இந்தியாவில் தான் பாய்கிறதாம்..! அந்த நதி எங்கு உள்ளது..! |
Which Animal Sleeps The Longest in Tamil:
அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது தெரியுமா..?
பதில்: வௌவால்
வௌவால் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்:
உயிரினங்களில் அதிக நேரம் தூங்கும் உயிரினம் வௌவால் ஆகும். இது ஒரு நாளைக்கு சராசரியாக 20 மணி நேரம் தூங்குகிறது.
உலகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட வகைகளில் வெளவால்கள் உள்ளன. வௌவால்கள் பாலைவனங்கள் மற்றும் துருவப் பகுதிகளைத் தவிர, கிரகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெளவால்கள் காணப்படுகின்றன.
மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா..? |
வௌவால் முதுகெலும்பு உள்ள பாலூட்டி இனம் ஆகும். பாலூட்டிகளில் பறக்கும் திறன் கொண்ட ஒரே விலங்கு வௌவால் தான். இதை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைக்கின்றோம்.
வௌவால்கள் 2 பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வௌவால்களின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) என்றும் சிறிய வௌவால்கள் (Mictro bats) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
வௌவால்கள் நீண்ட காலம் வரை அதாவது 41 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உயிரினம் சிறியதாக இருந்தால், அதன் ஆயுட்காலம் குறைவாக இருக்கும். ஆனால் வௌவால்கள் நீண்ட ஆயுளின் விதியை மீறுகின்றன என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
மேலும் பூனைகளைப் போலவே, வெளவால்களும் தங்களைத் தாங்களே சுத்தம் செய்து கொள்கின்றன. வெளவால்கள் அழுக்காக இல்லாமல் தங்களை அழகுபடுத்த அதிக நேரம் செலவிடுகின்றன என்று கூறப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 தலையில் இதயம் உள்ள உயிரினம் எது உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |