நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது..?

Which Aquatic Animal Does Not Drink Water in Tamil

Which Aquatic Animal Does Not Drink Water

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள  தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீர் எவ்வளவு முக்கியமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. ஆனால் இந்த உலகில் நீர் அருந்தாத ஒரு உயிரினம் இருக்கிறது. அதுவும் நீரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே அதற்கான விடையை தெரிந்து கொள்வோம்.

முட்டையிடும் விலங்குகள் எது..?

Which Aquatic Animal Does Not Drink Water in Tamil:

Which Aquatic Animal Does Not Drink Water

நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது..?

பதில்:  டால்பின் 

டால்பின் பற்றிய உண்மைகள்:

டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி சிற்றினம் ஆகும். இந்த டால்பின் திமிங்கலம் மற்றும் கடற்பன்றி போன்ற கடல்வாழ் உயிரினங்களுடன் நெருங்கிய உறவுமுறை கொண்டுள்ளது.

இந்த டால்பின் 40 வகையான சிற்றினங்கள் மற்றும் 17 வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த டால்பின்கள் நீரில் வாழ்ந்தாலும் நீரை அருந்துவதில்லை.  

இதன் உடல் திமிங்கலம் போல் இழை வடிவத்தில் இருக்கிறது. இதன் வால் துடுப்பு நிலையில் தட்டையானதாக இருக்கும். இதன் வாய் கூர்மையானதாக இருக்கும்.

டால்பின்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும், 40 கிலோ கிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டவைகளாக இருக்கின்றன. டால்பின் ஊனுண்ணிகள் என்று சொல்லப்படுகிறது. மீன்களை உணவாகக் உட்கொள்கின்றன.

இதையும் படித்துப்பாருங்கள் =>  நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பொதுவாக டால்பின்கள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவை உலகில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.  அதுமட்டுமில்லாமல் டால்பின்கள் மனிதர்களுடன் நெருங்கி பழகுகின்றன.

பெரும்பாலும் டால்பின்கள் நீரின் அடியிலும் மற்றும் நிலத்திலும் என்று இரு பகுதியிலும் நல்ல கண்பார்வை கொண்ட உயிரினம் ஆகும். இந்த டால்பின்கள்  மனிதனை விட 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்களை கேட்கும் திறனை கொண்டுள்ளன.

நீருக்கு அடியில் ஒலியைக் கேட்பதற்காக அமைந்திருக்கும் கீழ் தாடை எலும்பு, ஒரு கொழுப்பு நிறைந்த குழி வழியாக நடுச்செவியானது ஒலி கடத்துகிறது. டால்பின் பற்கள் எதிரொலியை உணர்ந்து ஒரு பொருளின் சரியான இடத்தை அறிவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  எலும்பு இல்லாத உயிரினம் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil