பறக்கும் போது தூங்கும் பறவை எது.?

Advertisement

பறக்கும்போது உறங்கும் பறவை

பொதுவாக நாத்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். இதற்காக தினமும் செய்தித்தாள், செய்திகள், புத்தகம் போன்றவை படிப்போம். இவற்றை படிப்பதால் நம்முடைய அறிவு திறன் மேம்படும்.  அதுமட்டுமில்லாமல் நிறைய பேர் அரசு தேர்வுகளுக்கு தயார் ஆகி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொது அறிவு வினா ஒரு பகுதியாக உள்ளது.

அதனால் அரசு தேர்விற்கு தயார் ஆகுபவர்கள் பொது அறிவு வினாக்காக புத்தகம் வாங்கி படித்த காலமெல்லாம் போகிவிட்டது. ஏனென்றால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனால் தங்களின் மொபைல்களிலே படிக்கின்றனர். அவர்களுக்காக இந்த பதிவில் பறக்கும் போது உறங்கும் பறவை எது என்று அறிந்து கொள்வோம்.

பறக்கும்போது உறங்கும் பறவை:

பறக்கும் போது உறங்கும் பறவையா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது புரிகிறது. அது எப்படி பறக்கும் போது பறவையால் பறக்க முடியும், அப்படி ஒரு பறவை உண்மையில் இருக்கிறதா என்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளவும்.

பறக்கும் போது உறங்கும் பறவை அல்பட்ராஸ் என்ற பறவை தான் பறக்கும் போது தூங்குமாம்.

இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்

அல்பட்ராஸ் பறவை பற்றிய தகவல்:

அல்பட்ராஸ் பறவை பற்றிய தகவல்

அல்பட்ரோஸ்  தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.

இந்த பறவையானது ஒவ்வொரு இனசேர்க்கையிலலும், ஒரே ஒரு முட்டையை மட்டுமே இட கூடியது. இதன் இறக்கைகள் பெரியதாக இருக்கும். மேலும் இறக்கைகள் ஆனது  3.7 மீட்டர் விரிய கூடியது,

நீண்ட ஆயுட்காலம் உடையது, அதாவது 40 ஆண்டுகள் உயிர் வாழ கூடியது. அதுமட்டுமில்லாமல் இந்த பறவையானது பறக்க ஆரம்பித்து விட்டால் நிலத்தில் கால் வைக்காதாம், அதாவது அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரைக்கும் பறந்து கொண்டே இருக்குமாம்.

இதனுடைய இனப்பெருக்கம் காலம் என்பது ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். இந்த காலத்தில் இவை தரையில் தான் இருக்கும். குஞ்சு பொறித்த பிறகு குஞ்சுகளுக்காக ஆண் பரவி மற்றும் பெண் பறவை இரண்டுமே உணவுகளை எடுத்து வரும். குஞ்சுகள் வளர்வதற்கு 165 நாட்கள் ஆகும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது தெரியுமா.?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement