மனிதனை போல் நடக்கும் பறவை எது.?
மனிதன் போலவே நடப்பவன்,நடிப்பவன் எல்லாம் மனிதன் மட்டுமே செய்ய முடியும் என்று தானே நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது. இவ்வுலகில் மனிதன் போலவே நடக்கும் பறவை உள்ளதாம் கேட்கவே ஆச்சிரியமாக இருக்கிறது அல்லவா.! அது என்ன பறவை என்று யோசித்து கொண்டே பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.
மனிதன் போலவே நடக்கும் பறவை:
மனிதனை போலவே நடக்கும் பறவை பென்குயின். மேலும் பென்குயின் பற்றிய சில தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
பென்குயின் பற்றிய சில தகவல்கள்:
17 வகையான பென்குயின்கள் உள்ளது. அதில் பேரரசு பென்குயின் மிக பெரியதாக இருக்கும்.
பென்குயின் வளர்ச்சி 4 அடி வரை வளரக்கூடியது. இதன் உடல் எடை 35 கிலோ வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?
பென்குயின் வகைகளில் மிகவும் சிறியதாக உள்ளது நீல பென்குயின்கள் அல்லது தேவதை பென்குயின். இது சாதரணமாக 35 செ.மீட்டர் முதல் 40 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. இது 1 கிலோ எடையையும் கொண்டிருக்கும்.
பென்குயின் 80% கடற்கரையிலே வாழ்கின்றன. இவை தங்கள் வாழ்நாட்களில் பாதி நாட்கள் கடலிலும், மீதமுள்ள நாட்கள் நிலத்திலும் வாழும்.
பென்குயின் கடல் சார்ந்த பறவை என கூறப்படுகின்ன்றன. இதற்கு இறக்கை இருந்தும் இதனால் பறக்க முடியாது.
பென்குயின் உணவாக மீன்களை தான் சாப்பிடும். சில மீன்கள் மற்றும் ஆக்டொபஸ் வகை உயிரினங்களையும் சாப்பிடுகின்றன.
பென்குயினின் உடலில் ஆண்டுக்கு ஒரு முறை இறக்கைகள் உதிர்ந்து, மறுபடியும் முளைக்க 2 ள்ளது 3 வாரங்கள் ஆகும். அந்த நாட்களில் பென்குயினால் தண்ணீரில் நீந்தவோ, மீன்களை பிடிக்கவோ முடியாது.
ஒரு பெண் பென்குயின் ஒரு முறைதான் முட்டை இடுகின்றன. அதன் பின் உணவை தேடி கடலுக்கு சென்று விடுகின்றன. ஆண் பென்குயின் தான் முட்டையை அடைகாக்கும். ஆண் பென்குயின்கள் உணவு சாப்பிட கூட வெளியில் செல்வதில்லை. 65 நாள் முதல் 75 நாட்கள் வரைக்கும் அடைகாக்கும். பென்குயின் வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம். ஆனால் அதற்குள் குஞ்சுகள் பொறித்துவிட்டாலும், ஆண் பென்குயின் குஞ்சுகளுக்கு உணவளித்து பாதுகாத்து கொள்ளும்.
உலகிலேயே மிகச்சிறிய பறவை எது உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |