கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை எது தெரியுமா..?

Advertisement

பறவை முட்டை

பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாட்டில் முட்டையில் தான் அதிகமான சத்துக்கள் உள்ளது என்று கூறுவார்கள். அதனால் தினமும் 1 முட்டை சாப்பிடுவது நம்முடைய உடல் நலத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பார்த்தால் நாட்டு கோழி முட்டை தான் உடலுக்கு நல்லது என்றும் கூறுவார்கள். இதுநாள் வரையிலும் நாம் இப்படி தான் கேள்வி பட்டிருருப்போம். அதுபோல அந்த முட்டையை நாம் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் பார்த்து இருக்கின்றோம். ஆனால் கருப்பு நிறத்திலும் ஒரு முட்டை உள்ளது. ஆகையால் கருப்பு நிறத்தில் முட்டையிட கூடிய பறவை என்னவென்று தெரியாமல் இருந்தால் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்⇒ நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Which Birds That Lay Eggs in Black:

காட்டு வாத்து

பறவைகள் நிறைய விதமாக இருக்கின்றன. அதுபோல அந்த பறவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒரு சிறிய மாற்றத்துடன் தான் காணப்படுகின்றன. ஆனால் அந்த பறவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் தான் முட்டை இடுகின்றது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம்.

 இதற்கு மாறாக கருப்பு நிறத்தில் முட்டையிடக்கூடிய ஒரு பறவை உள்ளது. அப்படி கருப்பு நிறத்தில் முட்டையிடக்கூடிய பறவை எதுவென்றால் காட்டு வாத்து ஆகும்.  

இத்தகைய காட்டு வாத்து இந்தியாவை விட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் தான் அதிகாமாக வாழ்கின்றன. ஏனென்றால் இந்த நாடுகளில் தான் மிதமான வெப்பமண்டலம் உள்ளது. ஆனால் குளிர்காலத்தில் மட்டும் காட்டு வாத்து இந்தியாவிற்கு வருகிறது.

இந்த காட்டு வாத்து  அனாட்டிடே என்ற குடும்பத்தை சேர்ந்ததாகும். அனாட்டிடே குடும்பத்தை சேர்ந்த வாத்துகள் 720 முதல் 1,640 கிராம் வரை எடையும், 54 செ.மீ முதல் 59 செ.மீ வரை நீளமும் மற்றும் 95 செ.மீ இறக்கையும் கொண்டிருக்கும்.

காட்டு வாத்தில் ஆண் மற்றும் பெண் வாத்து இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். அதில் ஒரு சிறிய வேறுபாடு மட்டும் உள்ளது. அது என்னவென்றால் ஆண் காட்டு வாத்தில் பில் மஞ்சள் நிறத்திலும் மற்றும் பெண் வாத்தில் கருப்பு நிறத்தில் குறியீடுகளுடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ தலையே இல்லாமல் 1 வாரம் வரை உயிர்வாழும் உயிரினம் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement