Which Country Does Not Eat Non-Vegetarian Food in Tamil
வணக்கம் வாசகர்களே..! இன்று காணப்போகும் பதிவு என்னவென்று மேல் படித்து தெரிந்திருப்பீர்கள். சரி அதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக அதற்கான விடையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா..? இது என்ன கேள்வி யார் தான் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள் சொல்லுங்கள் என்று கேட்பீர்கள். ஆனால் பல வருடங்களாக ஒரு நகரத்தில் அசைவ உணவே சாப்பிடாமல் இருக்கிறார்கள். அந்த நகரம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மிகவும் பணக்கார நகரம் எது தெரியுமா |
உலகில் அசைவ உணவு சாப்பிடாத நகரம் எது..?
பொதுவாக நாம் எங்காவது வெளியில் சென்றால் விதவிதமான அசைவ உணவுகளை உண்ண வேண்டும் என்று நினைப்போம். அதேபோல நம்மில் பலரும் வாரம் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் வாரத்திற்கு 1 நாள் அசைவம் சாப்பிடவில்லை என்றாலும் வாழ்க்கையே வெறுத்து போய்விடுகிறது என்று பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம்.
ஆனால் ஒரு நகரத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டு உள்ளது. அந்த நகரம் குஜராத்தில் தான் உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம் தான் இந்தியாவில் முதல் சைவ நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாலிதானா என்ற நகரம் தான் உலகின் முதல் சைவ நகரம் அதாவது First Vegetarian City of the World என்று சொல்லப்படுகிறது. குஜராத்தின் பாவ்நகர் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லை. அதேபோல இந்த நகரத்தில் இறைச்சி, முட்டைகளை விற்பது என்பது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.
முதன் முதலில் எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது தெரியுமா |
சைவ நகரமாக மாற காரணம் என்ன..?
அதுபோல இந்த பாலிதானா நகரத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த பாலிதானா என்ற நகரில் உள்ள ஒரே மலையில் 900 -க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது உலக சாதனையாக உள்ளது.
மேலும் இந்த நகரம் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. சமண மதத்தின் தலமாக இந்த நகரம் விளங்குகிறது. அதன் காரணமாக இந்த இடம் சைவ நகரமாக இருக்கிறது.
அதுபோல இந்த பாலிதானா நகரத்தில் உள்ள மக்கள் 2014 ஆம் ஆண்டில் இருந்து சைவ உணவு மட்டும் சாப்பிடுவதை கடைப்பிடித்து வருகிறார்கள். 2014 ஆம் ஆண்டில் 200 ஜைன துறவிகள் இறைச்சிக் கடைகளைத் தடைசெய்து, பாலிதானா நகரத்தை இறைச்சியற்ற நகரமாக அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக பாலிதானாவில் இறைச்சியை அரசாங்கம் தடை செய்தது. சமண மதத்தை பொறுத்தவரை மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்பது அவர்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதனாலேயே அந்த நகரத்தில் உள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை.
கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |