ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..?

Advertisement

Which Country Has More Female Than Male

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் இன்று ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சரி இதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்..!

கல்வியை முற்றிலும் இலவசமாக அளிக்கும் டாப்- 3 நாடுகள் எது தெரியுமா

Which Country Has More Female Than Male in Tamil: 

Which Country Has More Female

ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு எது..?

பதில் : நேபாளம் 

ஆமாம் நண்பர்களே ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள நாடு நேபாளம் ஆகும். நேபாளத்தில் ஆண் மக்கள் தொகையை விட பெண் மக்கள் தொகையே அதிகமாக இருக்கிறது.

நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். நேபாளம் இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.

இது கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கில், இந்தியாவிற்கும் வடக்கே சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பு நாடு ஆகும். நேபாளத்தின் தலைநகரம் காத்மாண்டு என்று சொல்லப்படுகிறது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள்

மேலும் நேபாளம் என்ற நாட்டில் பெண் மக்கள்தொகை 54.4% சதவீதம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உலகில் அதிக பெண்மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நேபாளம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மேலும் அதிக பெண் மக்கள்தொகை கொண்ட முதல் 10 நாடுகளை இங்கு காண்போம்.

அதிக பெண்கள் வசிக்கும் முதல் 10 நாடுகள் 
நேபாளம் 54.4
லாட்வியா  54.0
லிதுவேனியா  53.7
உக்ரைன்  53.7
ரஷ்யா  53.7
பெலாரஸ்  53.5
எல் சல்வடோர்  53.2
ஆர்மீனியா 53.0
எஸ்டோனியா  52.7
போர்ச்சுகல்  52.7

 

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement