உலகின் பள்ளிகளில் தேர்வு இல்லாத நாடு எது தெரியுமா..?

Advertisement

Which Country Has No Exams in The World 

இந்த நவீன காலத்தை பொறுத்தவரை ஆண் மற்றும் பெண் என இருவரும் படிப்பை மிகவும் முக்கியாயமான ஒன்றாக நினைத்து படித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களைவிட படிப்பில் அதிக முன்னுரிமை பெற்று வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் ஒவ்வொரு ஆசிரியர் என நியமனம் செய்து அதன் படியே மாணவர்களுக்கு படிப்பினை அளித்து வருகிறார்கள். என்ன தான் கல்வியினை மாணவர்களுக்கு அளிக்கும் விதம் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட அதில் சின்ன சின்ன மாற்றங்கள் காணப்படுகிறது. அது என்னவென்றால் உலகின் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வே இல்லாத நாடு என்று ஒன்று உள்ளதாம்..? கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் கூட அது உண்மை என்று தான் கருதப்படுகிறது. ஆகையால் இன்று உலகின் பள்ளிகளில் தேர்வு இல்லாத நாடு எது என்று..? தெரிந்துக்கொண்டு உங்களுடைய ஆச்சரியத்தை சரிசெய்து கொள்ளலாம் வாருங்கள்.

விமான நிலையமே இல்லாத நாடுகள்

தேர்வு இல்லாத நாடு எது..?

பின்லாந்து

ஒரு குழந்தை பள்ளி படிப்பினை படிக்க ஆரம்பிக்கும் போது தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய பள்ளி படிப்பானது நிறைய விஷயங்களை கற்றுத்தருவதோடு மட்டும் இல்லாமல் கற்றல் திறன், சிந்தித்தல் திறன் மற்றும் ஞாயாபக சக்தி என அனைத்தினையும் அதிகரிக்க செய்கிறது.

அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மாணவரின் படிப்பு முதல் இதர விஷயங்கள் அனைத்தினையும் கவனிக்கும் பொருட்டு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியரின் பொறுப்பு.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்ற ஒரு வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு மாறாக தேர்வு இல்லாத நாடு என்று ஒரு உள்ளதாம்..! அது என்ன நாடு தெரியுமா..?

பள்ளிகளில் தேர்வு இல்லாத நாடு பின்லாந்து. பின்லாந்தில் தேர்வு முறை என்பது கட்டாயம் இல்லை. இத்தகைய நாட்டில் மற்ற நாடுகளை போன்ற கல்வி முறையினையும் பின்பற்ற வில்லை.

பின்லாந்தில் ஒரு குழந்தை 7 வயதில் இருந்து தான் பள்ளிக்கு செல்ல ஆரம்பம் செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வருடத்தில் பாதி நாட்கள் மட்டுமே இந்த நாட்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

இத்தகைய நாட்டில் ஒரு குழந்தை படிக்க பிடிக்கவில்லை என்றொலோ அல்லது உடல் கொஞ்சம் சோர்வுடன் காணப்பட்டாலும் கூட ஓய்வு எடுப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது.

அதேபோல வீட்டு பாடம் போன்ற எதுவும் கிடையாது. குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த பாடத்தை படித்து கொள்ளலாம். மேலும் முக்கியமான ஒன்று என்னவென்றால் பின்லாந்தில் ஒரு தனியார் பள்ளிகள் கூட இது நாள் வரையிலும் கட்டப்பட வில்லை. அனைத்து குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் கல்வியை கற்று வருகின்றனர்.

மேலும் பின்லாந்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் இதர திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

 பின்லாந்து தேர்வு இல்லாத நாடக இருப்பது போல உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்திலும் காணப்படுகிறது. 
தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம் எது?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement