உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?

Advertisement

Which Country Has No Jail in The World 

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்தல் என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. சிலநேரத்தில் செய்யும் தவறு ஆனது சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதற்கு தக்க தண்டனை ஆனது சட்டத்தால் வழங்கப்படும். இதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் என்று உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிறைச்சாலையில் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் சிறைச்சாலை என்பதே கிடையாதாம். இது கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது. அப்படி என்றால் அந்த நாட்டில் ஒருவர் கூட குற்றம் செய்வது இல்லையா..? ஒருவேளை தெரியாமல் குற்றம் செய்தால் அவர்கள் எந்த சிறைச்சாலையில் வைக்கப்படுவார்கள் என்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிறைச்சாலை இல்லாத நாடு:

சிறைச்சாலை இல்லாத நாடு

ஒரு நாட்டில் நிகழும் குற்றங்களை பொறுத்தே அந்த நாட்டின் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆனது கூறப்படுகிறது. அதுமட்டும் இத்தகைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் அதிகாரிகளையும், அதற்கான தண்டனையினை வழங்குவதற்காக நீதிபதிகளும் உள்ளார்கள்.

இதுநாள் வரையிலும் மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் தான் அனைத்து நாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும், தவறு செய்த குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருப்பார்கள் என்றும் நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இதற்கு மாறாக மற்றொரு நாடும் வெகு விமர்சனமாக இடம் பெற்றிருக்கிறது. அதாவது சிறைச்சாலை இல்லாத நாடு ஒன்று உள்ளது. அது என்ன நாடு தெரியுமா.?

உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்து தான். நெதர்லாந்தை பொறுத்தவரை குற்றம் நடைபெறுதல் என்பது எண்ணிக்கையில் மிகவும் குறைவாக தான் இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் இத்தகைய நாட்டில் குற்றம் யாரும் புரியாததால் சிறைச்சாலை மூடப்பட்டு இருப்பதனால் நார்வே நாட்டில் உள்ள கைதிகள் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டு விட்டது.

போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது

 

அதேபோல் நெதர்லாந்து நாட்டின் சில ஆய்வுகளுக்கு உட்பட்டு அங்கு வசிக்கும் 1 லட்சம் மக்களில் 60 நபர்கள் மட்டுமே குற்றம் செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2013-ஆம் ஆண்டில் வெறும் 19 கைதிகள் மட்டும் இருந்ததாகவும், அதன் பிறகு 2018-ஆம் ஆண்டில் கைதிகள் ஒருவர் கூட இல்லை என்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

மேலும் ஒருவேளை நெதர்லாந்தில் கைதிகள் இருந்தாலும் கூட அவர்கள் சமூகத்தில் அனைவருடனும் பழக விடுகிறார்கள். ஆனால் அவர்களின் முழங்காலில் மின்னணு கணுக்கால் கண்காணிப்பு மூலம் முழுமையாக அவர்கள் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறார்கள்.

அதாவது நெதர்லாந்தில் உள்ள ஒரு சில குற்றவாளிகள் ஜெயிலில் இல்லாமல் சமூகத்தில் பழக விட்டு திருத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதுவே குற்றங்கள் இல்லமால் இருப்பதற்கான காரணமாக அமைகிறது.

எனவே ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து ஆனது சிறைச்சாலை இல்லாத நாடு என்றும், பாதுகாப்பான நாடு என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ந்து வருகிறார்கள்.

உலகில் ராணுவம் இல்லாத நாடுகள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement