பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது தெரியுமா..?

Which Country Is Famous For Silk Clothes in Tamil

Which Country Is Famous For Silk Clothes in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே ஆடைகள் என்றால் பிடிக்கும். அதுவும் இந்த காலத்தில் சொல்லவே வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விதவிதமான தமிழ் ஆடைகள் வந்துவிட்டது. ஆனால் எதிலும் பெண்களுக்கு தான் அதிக ஆர்வம் இருக்கிறது. அதாவது அழகை மேம்படுத்துவதிலும் சரி ஆடைகள் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதிலும் சரி பெண்களுக்கே ஈடுபாடு அதிகம். என்ன தான் பெண்களுக்கு ஆடைகள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பது பட்டாடைகள் தான். அப்படி பெண்கள் மத்தியில் பட்டாடைகள் முதலிடத்தை பிடித்துள்ளது. சரி இந்த பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது என்று உங்களுக்கு தெரியுமா..?

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது..? 

which country is famous for silk clothes

நம் வீட்டில் ஏதாவது விஷேசம் நடக்கப்போகிறது என்றால், நம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பட்டு புடவைகள், குழந்தைகளுக்கு பட்டு பாவாடை சட்டைகள், பட்டு வேஷ்டிகள் என்று பட்டு ஆடைகளை தான் வாங்குவோம். அப்படி நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் பட்டாடைகளுக்கு புகழ்பெற்ற நாடு எது என்று இங்கு காணலாம்.

பொதுவாக புரதங்களால் ஆனது மற்றும் முதன்மையாக பட்டுப்புழு கொக்கூன்களிலிருந்து பெறப்படும் இயற்கை நார்ச்சத்து பட்டு என்று அழைக்கப்படுகிறது.

அப்படி பட்டாடைகளுக்கு புகழ்பெற்ற நாடாக சீனா உள்ளது. சீனா அதிக அளவில் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிக பட்டு உற்பத்தி செய்கிறது.

உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா

பட்டு என்பது புதிய கற்கால சீனாவில் முதன் முதலில் பட்டு புழுவின் கூழின் இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு துணியாகும். பட்டு சர்வதேச அளவில் பட்டு அந்துப்பூச்சியிலிருந்து கொக்கூன்களாகவோ அல்லது அரை பதப்படுத்தப்பட்ட மூல பட்டு நூலாகவோ வர்த்தகம் செய்யப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு தகவலின்படி சீனா ஆண்டுக்கு சுமார் 150,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது. இது உலகின் 78% பட்டு உற்பத்தி செய்யும் உலகின் மற்ற பகுதிகளை விட அதிகமாகும்.

இது சிறு விவசாயிகளுக்கு முக்கிய வருமான ஆதாரமாக மாறியது. மேலும் நெசவு நுட்பங்கள் மேம்பட்டதால், சீனப் பட்டின் புகழ் உலகெங்கும் பரவி இருக்கிறது. அதனால் பட்டு உற்பத்தியில் மிகப்பெரிய நாடு சீனா என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil