பெட்ரோலியம் உற்பத்தியில் உறுப்பினர் ஆகாத நாடு | Which Country is not a Member of OPEC in Tamil
நாள்தோறும் பொது அறிவு சார்ந்த வினா விடையை படிப்பது சிறந்த பழக்கம். இது நமக்கு பொது அறிவு திறனை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல், போட்டி தேர்வில் கலந்து நாம் வெற்றி அடைவதற்கும் பயன்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவிலும் OPEC பற்றிய ஒரு பொது அறிவு கேள்வியை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். OPEC( Organization of the Petroleum Exporting Countries) என்பது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு ஆகும். இது 1960 ஈரான் வெனிசுலா ஈராக் குவைத் சவூதி அரேபிய நாடுகளால் நிறுவப்பட்டது. மேலும் இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
OPEC உறுப்பினர் ஆகாத நாடு? | A country that is not a member of OPEC in Tamil:
பெட்ரோலியம் ஏற்றுமதியில் உறுப்பினராக இல்லாத நாடு கென்யா. அந்த வகையில் OPEC-க்கான மாநாடு முதல் முதலில் செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி 1960-ஆண்டு பாக்தாத்தில் நடைபெற்றது. மேலும் இதன் OPEC தலைமையகம் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் அமைந்துள்ளது.
கென்யாவின் சிறப்பு அம்சங்கள்:
- கென்யா கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் உள்ள நாடு ஆகும். மேலும் இதன் தலை நகரம் நைரோபி. கென்யா நாட்டின் பரப்பளவு 5,81,309 சதுர கிலோமீட்டர் ஆகும்.
- கென்யாவை சேர்ந்த வங்காரி மாத்தாய் என்ற பெண் சுற்றுசுழலால் பணிக்காக 1991 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதை பெற்றார். அதோடு மட்டுமில்லாமல் அமைதிக்கான நோபல் பரிசினையும் இவர் பெற்றுள்ளார்.
- கென்யா நாட்டில் காகங்களை குங்குரு, குராபு என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் கென்யாவில் அதிக வனவிலங்குகளும் காணப்படுகிறது. அந்த வகையில் கென்யா வனவிலங்கு பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த நாடாகவும் விலங்குகிறது. இது மட்டுமில்லாமல் தேயிலை தோட்டங்கள், சிங்கம்,
உலகில் இரவே இல்லாத 6 நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
- நீர்யானை, யானைகள், சிறுத்தைகள், காண்டம்மிருங்கள், போன்ற விலங்குகளுக்கும் புகழ் பெற்றவையாகும்.
- கென்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு அங்குள்ள சுற்றுலா தளங்கள் என்பது மற்றொரு சிறப்பாகவும் கருதப்படுகிறது.
- கென்யாவின் பழைய பெயர் பிரிட்டிஷ் கென்யா. அங்கு பேசப்படும் மொழி ஆங்கிலத்தை அலுவலக மொழியாகவும், சுவாஹிலி தேசிய மொழியாகவும் காணப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் கென்யாவில் மேலும் 43 மொழிகளை பேச்சுவழக்கிலும் பேசுகிறார்கள். இங்கு சுமார் 54 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
- இத்தகைய கென்யாவில் 4 கடல் பூங்காக்கள், 6 தேசிய சரணாலயங்கள் மற்றும் 6 கடல் இருப்புக்கள் ஆகியவற்றின் தாயகமாக விளங்கி வருகிறது.
- விளையாட்டில் நீண்ட தூர ஓட்டபந்தையா விளையாட்டு வீரர்களின் தாயகமாகவும் இது இருக்கிறது என ஹரோன் அவர்கள் கூறுகிறார்கள்.
- துர்கானா ஏரி கென்யா நாட்டின் மிகப்பெரிய ஏரியாக உள்ளது. மேலும் இந்த ஏரி 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மேல் காணப்படுகிறது.
- மேலும் அந்நாட்டில் செய்யும் காபி ஆனது உலகிலேயே உயர் தர காப்பியாக கருதப்படுகிறது.
உலகிலேயே அதிக மழை பெய்யும் Top 5 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |