Thalaiyil Idhayam Ulla Uyirinam Ethu | தலையில் இதயம் கொண்ட நீர்வாழ் உயிரினம்
இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். பொதுவாக நம் அனைவருக்குமே தினம் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். இன்று நம் பதிவின் வாயிலாக தலையில் இதயத்தை கொண்டுள்ள உயிரினம் எது என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். விடை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு உயிரினமும் வியப்பூட்டும் உடல் அமைப்புகளை கொண்டிருக்கும். மனிதர்களை போலல்லாமல் பல ஆச்சரியமூட்டும் உடல் அமைப்பை கொண்டிருக்கும். மனிதர்களுக்கும் மற்ற பெரும்பாலான உயிரினங்களுக்கும் விலங்குகளுக்கும் இதயம் நெஞ்சு பகுதியில் அல்லது உடல் பகுதியில் இருக்கும். ஆனால், இந்த ஒரு உயிரினத்திற்கு மட்டும் தலையில் இதயம் இருக்கிறதாம்.
| இதயமே இல்லாத உயிரினம் உள்ளதா.! அப்போ எப்படி உயிர் வாழும் |
Which Animal has Heart in Head in Tamil:

தலையில் இதயம் உள்ள உயிரினம் எது..?
விடை: இறால்
இறால் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

- இறால் என்பது ஒரு Exoskeleton மற்றும் பத்து கால்கள் கொண்ட சிறிய நீர்வாழ் ஓட்டுமீன்களின் பெயர் ஆகும். இறால்களில் மொத்தமாக 13 வகைகள் உள்ளன.
- இது பொதுவாக 1 முதல் 1.5 சென்டிமீட்டர் வரை இருக்கும். இறால்கள் பொதுவாக கருப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.
- பெண் இறால்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை வெளியிடுகின்றன. பெரும்பாலும் இறால்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து நிறத்தைமாற்றி கொள்கின்றன.
| மூன்று இதயங்களை கொண்ட கடல்வாழ் உயிரினம் எது தெரியுமா..? |
- இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மனிதர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் இருக்கிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது.
- பெரும்பாலும் இது நீரில் பின்புறமாக நீந்தக் கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக இருக்கின்றது.
- இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. இறால்கள் ஆழ்கடல் பகுதியில் தான் முட்டைகளையும் இடுகின்றன.
- மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல இறால் மீன்களிலும் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன.
- இதில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இறால்களில் காணப்படும் கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
| கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா..? |
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














