Which Creature Has Ears On Its Legs
அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். நாம் அனைவருமே இந்த வாழும் உயிரினங்கள் அனைத்துமே உருவத்தில் வேறாக இருந்தாலும் உறுப்புகள் ஒன்றாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருகின்றோம். ஆனால் விலங்குகளாக இருந்தாலும் சரி பூச்சிகளாக இருந்தாலும் சரி அது உறுப்புகளில் வேறாக தான் இருக்கிறது. அந்த வகையில் கால்களில் காதுகள் இருக்கும் உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது..? |
Which Creature Has Ears On Its Legs in Tamil:
கால்களில் காதுகள் இருக்கும் உயிரினம் எது..?
விடை: வெட்டுக்கிளி.
வெட்டுக்கிளி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:
வெட்டுக்கிளி நீண்ட தூரம் பறக்கும் மற்றும் அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் திறன் கொண்ட ஒரு பூச்சி ஆகும்.
உலகில் எண்ணிக்கையற்ற வெட்டுக்கிளிகள் உள்ளன. இது சுமார், 11,000 வகையான வெட்டுக்கிளிகள் உள்ளன என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
இது பொதுவாக பாலைவனங்கள், காடுகள், புதர்கள், விவசாய நிலங்கள், வெப்பமண்டல காடுகள் அல்லது புல்வெளிகள் போன்ற திறந்த நிலங்களில் காணப்படுகின்றன.
முட்டையிடும் விலங்குகள் எது..? |
பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள் வாழ்ந்து வருகின்றன. வெட்டுக்கிளிகள் பொதுவாக தாவர உணவுகள் அதிகமாக உள்ள பகுதிகள் மற்றும் மித வெப்பமான சூழலில் வாழ்கின்றன.
வெட்டுக்கிளிகள் 1 முதல் 7 செ.மீ அளவு மட்டுமே இருக்கும். அவை நம் வீட்டில் இருக்கும் ஈ -யை விட 8 மடங்கு பெரியதாகவும், எறும்பை விட 15 மடங்கு பெரியதாகவும் இருக்கும்.
வெட்டுக்கிளிகள் மிகவும் குறைந்த எடை கொண்டவையாக இருக்கின்றன. அதை 1 கிராமுக்கும் குறைவான எடையை கொண்டுள்ளது.
பொதுவாக, வெட்டுக்கிளிகள் தனித்துப் வாழக்கூடியது. இது உணவுக்காக நாடு முழுவதும் இடம் பெயர்கின்றன.
இதையும் படித்துப்பாருங்கள் => நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் => எலும்பு இல்லாத உயிரினம் எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |