Which Creature Has No Eyes
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். நாம் வாழும் இந்த பூமியில் கண் இல்லாமல் இருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம். ஆனால் கண் இல்லாமல் வாழும் ஒரு உயிரினம் இருக்கிறது. அந்த உயிரினம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாவதவர்கள் இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்..!
Which Creature Has No Eyes in Tamil:
கண்கள் இல்லாத உயிரினம் எது..?
விடை: மண்புழு
நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
மண்புழுவின் சிறப்புகள்:
மண்புழு கண் இல்லாத உயிரினம் என்றும் தோலினால் சுவாசிக்கும் உயிரினம் என்று சொல்லப்படுகிறது. மண்புழு உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது. மண்புழுவின் உடலானது நீண்ட தசை நார்களால் ஆனது. சுருங்கி நீளும் தன்மை கொண்ட இந்தத் தசை நார்கள் இயங்குவதால் தான் மண்புழு நகர்கிறது.
மண்புழு உடலின் முன் நுனியிலுள்ள வாய் மண்ணை உண்டு உடலின் இறுதி வரை அனுப்புகிறது. அப்போது தான் செரிமானம் நடைபெறுகிறது.
மண்புழுக்களின் தோல் எப்பொழுதும் ஈர தன்மையுடன் இருக்க வேண்டும். அதன் காரணமாக தான் மண் புழுக்கள் அதிகமாகக் காற்று வீசும் இடத்திலும் வெயிலிலும் இருப்பதில்லை. இதனால் தான் மண்புழுக்கள் எப்பொழுதும் ஈரப்பதமான மண்ணிலேயே வாழ்கின்றன.
மண்புழு மண்ணில் உள்ள மட்கிய தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை மண்ணுடன் சேர்த்து உண்ணுகிறது.
இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?
இயற்கையில் கிடைக்கக் கூடிய விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை மண்புழு உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக வெளியேற்றும் முறையை நாம் ‘மண்புழு உரம்’ என்று கூறுகின்றோம்.
இந்த மண்புழுவால் நமக்கு கிடைக்கும் உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற சத்துக்கள் இருக்கிறது. இந்த உரம் பயிர்களை செழிப்பாக வளர செய்கிறது. மண்புழு உரம் கோடைக்காலத்தில் மண்ணின் வெப்பநிலையைக் குறைத்து வேர்கள் சிதைவதை தடுக்க உதவுகிறது.
மேலும், மழைக் காலங்களில் மண் அரிப்பைத் தடுத்து மண்ணை வெப்பமாக வைத்திருக்க இந்த மண்புழு உரம் உதவுகிறது. அதனாலேயே மண்புழுவை உழவர்களின் நண்பன் என்று அழைக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்=> சிலந்திக்கு எத்தனை கண்கள் உள்ளன தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |