Which Creature Has No Head in Tamil
பொதுவாக மனிதனாக இருந்தாலும் சரி அப்படி இல்லை உயிரினமாக இருந்தாலும் சரி உடம்பில் பொதுவான சில உறுப்புகள் காணப்படும். இந்த உறுப்புகள் அனைத்தும் நமது உடலில் ஏதோ ஒருவகையான செயல்பாட்டினை நடக்க செய்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்பு சரியாக இயங்கவில்லை என்றாலும் நாம் உயிர்வாழ்வது என்பது சாத்தியம் இல்லாத ஒரு செயல் ஆகும். ஆனால் தலை இல்லாமல் 1 வாரம் வரை உயிர்வாழக்கூடிய ஒரு உயிரினம் இருக்கிறது. இதை கேட்பதற்கு அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். அப்படி ஒரு உயிரினம் இருப்பது உண்மை தான். ஆகாயல் அத்தகைய உயிரினம் என்ன என்று இன்றைய பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!
இதையும் படித்துப்பாருங்கள்⇒ நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
தலை இல்லாமல் வாழும் உயிரினம் எது..?
இயற்கையாக கண், வாய், மூக்கு, தலை, சிறுநீரகம், இதயம் மற்றும் காது போன்ற உறுப்புகள் அனைத்தும் நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இந்த உறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியாது. ஏன் உயிர்வாழ முடியுமா என்று கூட தெரியவில்லை.
அதுபோல நமக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால் கண் தெரியவில்லை என்றால் கூட உயிர்வாழ முடியும். ஆனால் தலை இல்லை என்றால் வாழவே முடியாது என்பது தான்.
நாம் இப்படி நினைத்து கொண்டிருக்கிறோம் இதற்கு எதிர்மாறாக தலை இல்லாமல் 1 வாரம் வரை உயிர்வாழக்கூடிய உயிரினம் இருக்கிறது. அது என்ன உயிரினம் தெரியுமா..?
1 வாரம் வரை தலை இல்லாமல் உயிர்வாழக்கூடிய உயிரினம் கரப்பான் பூச்சி தான். இந்த கரப்பான் பூச்சி மற்ற உயிரினங்களை போல சுவாசிப்பதற்காக மூளை அல்லது வாயினை சார்ந்து இல்லை.கரப்பான் பூச்சி அதனுடைய உடலில் உள்ள துளைகள் மூலமாக தான் சுவாசிக்கிறது.வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது தெரியுமா..?
இந்த கரப்பான் பூச்சி தலை இல்லாமல் கூட 1 வாரம் உயிர்வாழ்ந்து விடும் ஆனால் வாய் இல்லாமல் உயிர்வாழாது.
கரப்பான் பூச்சியில் ஹீமோகுளோபின் என்ற நிறமி இல்லாத காரணத்தினால் இதனுடைய இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.
இதனுடைய உடல் நிறைய பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய ஒவ்வொரு பகுதிகளின் அதில் உள்ள நரம்பு திரள்கள் தான் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த கரப்பான் பூச்சி பலருடைய வீட்டிலும் வாழ்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |