உலகின் மிக நீளமான நதி
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இயற்கையின் அழகு என்றாலே அதிகமாக பிடிக்கும். அதிலும் சிலர் இப்படிப்பட்ட அழகினை காண வேண்டும் என்று வெளியூர்களுக்கு எல்லாம் சென்று பார்த்து ரசித்து வருவார்கள். அப்படிப்பட்ட இயற்கையின் அழகில் நதியும் ஒன்று. ஆனால் இத்தகைய நதியானது ஊருக்கு ஒன்று ஏன் மாவட்டத்திற்கு ஒன்று இருக்குமா என்று கேட்டாலே அது மிகவும் அரிதான ஒன்று. இதுநாள் வரையிலும் நாம் எப்படி நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை எல்லாம் விட நமக்கு தெரியாத ஆச்சரியமான ஒன்று உள்ளது. அது என்னவென்றால் உலகின் மிகவும் நீளமான நதி என்று ஒன்று உள்ளது. ஆகையால் இன்று உலகின் மிகவும் நீளமான நதி எங்கு அமைந்துள்ளது மற்றும் அதனுடைய சிறப்பு என்னவென்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுவது எது தெரியுமா… |
Which is The Longest River in The World:
நதி என்றாலே பார்ப்பதற்கு கண்ணை கவரும் விதமாக அழகாக இருக்கும். ஆனால் அந்த நதி எங்கு இருந்த ஆரம்பிக்கிறது மற்றும் அது எங்கு முடிகிறது என்று கேட்டால் நமக்கு அவ்வளவாக தெரியாது.
இதுவே நமக்கு தெரியாமல் இருக்கும் பட்சத்தில் மிகவும் நீளமான நதி என்று ஒன்று உள்ளது. ஆமாம் அப்படி ஒன்று உள்ளது உண்மை தான். உலகின் மிகவும் நீளமான நதி எது என்றால்..?
அது நைல் நதியாகும். இத்தகைய நைல் நதியானது வடகிழக்கு ஆப்பிரிக்காவின் வடக்கே பாயும் மிகவும் பெரிய அளவிலான ஒரு நதியாகும். இத்தகைய நதியானது சுமார் 6,853 கிலோ மீட்டர் கொண்ட நதியாகும்.
இத்தகைய நைல் நதியினை சர்வேதேச நதி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நதியின் வடிகால் படிகையானது ருவாண்டா, புருண்டி, எரித்திரியா, தெற்கு சூடான், எகிப்து, சூடான் குடியரசு, உகாண்டா, கென்யா, காங்கோ ஜனநாயக குடியரசு, தான்சானியா மற்றும் எத்தியோப்பியா போன்ற 11 நாடுகளின் வடிகால் படிகையினை உள்ளடக்கியதாகும்.
நைல் நதி 11 நாடுகளின் வடிகால் படிகையினை கொண்டிருந்தாலும் கூட சூடான் மற்றும் எகிப்து தான் முதன்மை நீர் ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நைல் நதிக்கு இரண்டு துணை நதிகளும் உள்ளது. முதல் துணை நதி நீள நைல் நதி மற்றும் இரண்டாவது துணை நதி வெள்ளை நைல் நதியாகும்.
இதையும் படியுங்கள்👉👉👉👉 உலகில் மிக நீளமான கடற்கரை எது தெரியுமா..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |