மீன்கள் பற்றிய தகவல்
பொதுவாக அசைவ பிரியர்கள் அனைவருடைய வீட்டிலும் மீன் சமைத்து சாப்பிடுவது பழக்கமாக இருக்கும். அதிலும் சிலர் வீட்டில் கெண்டை மீன், கெழுத்தி மீன், சிலேப்பி மீன், திருக்கை மீன், பாறை மீன் மற்றும் விரால் மீன் என இது போன்ற பல வகையான மீன்கள் சமைத்து சாப்பிடுவார்கள். வீட்டில் சமைப்பது மட்டும் இல்லாமல் ஹோட்டல்களிலும் வாங்கி சாப்பிடுவார்கள். அதுபோல ஒரு சிலர் வீட்டில் அழகிற்கு என்று தனியாக மீன்களை வாங்கி வளர்த்து வருகின்றனர். இது நாள் வரையிலும் நாம் மீன்களை பற்றி இப்படி தான் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் ஒன்று இருக்கிறதாம். இது நமக்கு கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் கூட அது உண்மை என சொல்லப்படுகிறது. மேலும் அது என்ன மீன் இனம் என்று தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா..?
உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது தெரியுமா..?
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் எத்தனையோ மீன் இனங்கள் இருந்தாலும் கூட அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் என்று இது நாள் வரையிலும் ஒன்று இருந்து கொண்டு இருக்கிறது.
இது பலரும் கேள்விப்படதா ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அது உண்மை என்று கூறப்படுகிறது. ஆம் உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது என்றால்..?
அத்தகைய மீன் இனம் கல் மீன் என்று சொல்லப்படுகிறது. இந்த கல் மீன் இந்தியா பசுபிக் பெருங்கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மீன் இனம் ஆகும்.
இந்த கல் மீன் சினான்சீடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். சினான்சீடே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து மீன்களும் அதிக விஷத்தன்மையுடன் இருந்தாலும் கூட அதில் கல் மீனில் தான் அனைத்தையும் விட அதிகமான விஷத்தன்மை இருக்கிறது.
இத்தகைய மீன் பார்ப்பதற்கு கல் போன்ற அமைப்பிலும் மற்றும் முள் போன்ற இறக்கையினையும் கொண்டிருக்கும். கல் மீனின் இறக்கையின் கீழே தான் விஷத்தன்மை நிறைந்த பைகள் இருக்கிறது.
நாம் தெரியாமல் கல் போன்ற வடிவத்தில் உள்ள இந்த மீனை காலால் மிதித்தால் உடனே நம்மை இந்த மீன் கடித்து விடும்.
கல் மீன் நம்மை கடித்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையினை பெறுவது நல்லது. ஏனென்றால் இதனுடைய விஷம் நமது உடலில் பரவி நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
அதேபோல அதிக விஷத்தன்மை வாய்ந்த இந்த கல் மீனின் ஒரு சொட்டு உமிழ்நீர் நமது உடலில் பட்டாலும் அதுவும் விஷம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை கல் மீன் கடித்தாலோ அல்லது அதனுடைய உமிழ் நீர் பட்டாலோ சிகிச்சை பெறவில்லை என்றால் சில நேரத்தில் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |