ஆசியாவிலே மிகவும் தூய்மையான நதி இந்தியாவில் தான் பாய்கிறதாம்..! அந்த நதி எங்கு உள்ளது..!

Advertisement

தூய்மையான நதி எது..? | Which is The Purest River in The World in Tamil

பொதுவாக இந்தியாவில் ஆறுகளை சுத்தமாக பார்த்தது உண்டா..? அதேபோல் இந்தியாவில் தான் ஆறுகளை ஆன்மீகத்துடன் ஈடுபடுத்தி கொள்கிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும் ஆறுகள் மற்றும் குளங்கள் அசுத்தமாக தான் உள்ளது. அவ்வளவு ஏன் சமீப காலமாக அதாவது கொரோனா காலத்தில் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்துள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில் சுத்தமான ஆறுகளை நீங்கள் பார்த்தது உண்டா..? அல்லது தெளிவான நீரை பார்த்தது உண்டா..? கவலையை விடுங்க இப்போது ஆசியாலேயே இந்தியாவில் தான் சுத்தமான நதி பாய்கிறது அது என்ன என்பதை பற்றிய முழு தகவலை படித்து தெரிந்து கொள்வோம்..!

Which is The Purest River in The World in Tamil:

which is the cleanest river in asia in tamil

மேகாலயா மாநிலம் ஷில்லாங்லிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் பாயும் நதியை உம்காட் என்பார்கள். இந்த நதியின் கடற்கரையை தான் ஆசியாவிலேயே மிக  சுத்தமான கிராமம் என்று சொல்லப்படுகிறது. அந்த கிராமத்தின் பெயர்  (Mawlynnong) மாவ்லின்னாங் ஆகும்.

இது கிராமம் தான். 100 சதவீத கல்வியறிவை பெற்ற கிராமம் ஆகும். ஜெயின்டியா மற்றும் காசி மலைகளுக்கிடையே ஓடும் உம்காட் நதி பின்னர் வங்கதேசத்துக்குள் புகுந்து பாய்கிறது. இந்த நதியின் சிறப்பு என்னவென்றால் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கும்.

அந்த ஆற்றில் படகில் சென்றால் ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வுகள் இருக்கும். நீருக்குள் இருக்கும் மீன்கள் மற்றும் பாறைகள் 10 அடி தூரத்தில் இருந்தாலும் அது பக்கத்தில் இருப்பது போல் அவ்வளவு தெளிவாக தெரியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா..?

which is the cleanest river in asia in tamilஇந்த நதியை பார்க்க நினைத்தால் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பார்க்கலாம். கடவுளின் தோட்டம் என்கின்ற பெயரை பெற்ற இந்த கிராமம் இயற்கை வளங்கள் நிறைந்த கிராமம் ஆகும். இந்த கிராமம் 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசியாவில் சுத்தமான கிராமம் என்ற விருதை தக்கவைத்துக் கொண்டு உள்ளது.

which is the cleanest river in asia in tamil

இந்த கிராமத்தில் 95 குடும்பத்தில் 500 பேர் எங்கு குப்பைகள் இருந்தாலும் அந்த குப்பையை சுத்தம் செய்ய ஆரம்பம் செய்கிறார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉  உலகின் அகலமான நதி எது?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement