காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் எது.?

Advertisement

காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம்

காவிரி ஆறு அல்லது காவேரி ஆறு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணை, கிருட்டிணராச சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை போன்ற அணைகள் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள்  ஆகும். காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு அணைகளுக்கு தண்ணீர் செல்கிறது. காவிரி ஆறு வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

காவிரி ஆறு பற்றி நாம் பல தகவல்களை அறிந்து இருந்தாலும், நம்மில் பலருக்கும் காவிரி ஆறு எங்கு தோன்றுகிறது என்பது தெரியாமல் இருக்கும். அதனால் காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்போம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை

Which is The Source of River Cauvery in Tamil | காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் எது.?

காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம்

 தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகளில் காவிரி ஆறும் ஒன்றாகும். காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில், தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. இது 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ ஆகும்.  

காவிரி ஆறு, கர்நாடக மாவட்டத்தின் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம் மற்றும் சாமராசநகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும்  மயிலாடுதுறை மாவட்டம் வழியாகவும் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 10 பெரிய ஆறுகள் எது தெரியுமா..?

காவிரி ஆறு, அதன் நீர்மட்டத்தை அதிகரிக்கும் கபினி மற்றும் பவானி ஆறுகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளை கடக்கிறது.

காவிரி ஆற்றின் துணை ஆறுகள் என்று பார்த்தல், கர்நாடக மாநிலத்தில் கபினி, ஏமாவதி, ஆரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி, சிம்சா மற்றும் சொர்ணவதி ஆகிய ஆறுகள் துணை ஆறுகள் ஆகும். தமிழ்நாட்டில் பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகள் துணை ஆறுகள் ஆகும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement